விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா?: எத்தனை பேருக்கு அனிதா நினைவு வந்தது?
சென்னை: விஸ்வாசம் படத்தில் அனிதா குறித்து தல பேசியதை கவனித்தீர்களா?
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் தல ரசிகர்களுக்கு மட்டும் அல்ல குடும்ப ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துள்ளது. படத்தில் வரும் தந்தை, மகள் சென்டிமென்ட்டை பார்த்துவிட்டு தியேட்டரில் அழுதவர்கள் பலர்.
படத்தில் நீட் தேர்வின் கொடுமையால் உயிரை விட்ட அனிதாவை நினைவுகூர்ந்துள்ளார் சிவா.

தற்கொலை
18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தன்னை தானே மாய்த்துக் கொண்டால் அதற்கு பேர் தற்கொலை இல்லை சார் கொலை என்று அஜித் பேசியது அனிதாவை மனதில் வைத்து தான் என்று கூறப்படுகிறது.
பெருமை
சிவா நினைத்திருந்தால் அனிதாவின் பெயரை பயன்படுத்தி இலவச விளம்பரம் தேடியிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை என்று அஜித் ரசிகர்கள் பெருமையாக கூறி வருகிறார்கள்.

படங்கள்
தற்போது எல்லாம் படங்களுக்கு அரசு, அரசியல் கட்சிகள் சார்பில் எதிர்ப்பு கிளம்பி இலவச விளம்பரம் கிடைக்காதா என்று எதிர்பார்க்கிறார்கள். சிலர் வாய் விட்டே கேட்கிறார்கள். இந்நிலையில் சிவா அப்படி செய்யாமல் சொல்ல வேண்டியதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
பாசம்
விஸ்வாசம் படத்தை பார்க்கும்போது தியேட்டரில் பிள்ளைகளும், தந்தைகளும் கண் கலங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











