பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனிதா.. முன்கூட்டியே அட்மின் போட்ட டிவிட்ட பாருங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று அனிதா சம்பத் வெளியேறியுள்ள நிலையில் முன்கூட்டியே அவரது அட்மின் பதிவிட்ட டிவிட் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் தனித்துவமான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் அனிதா சம்பத்.
Recommended Video

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது முதலே எப்படி வெளியே காட்டுகிறார்களோ பெயர் கெட்டுவிடுமோ என்று ஓவர் கான்ஷியஸில் இருந்தார்.

செய்திகள் வாசிப்பது
இதற்காக பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி செய்திகள் வாசிப்பது போன்றும் யூடியூப்பில் வாய்ஸ் ஓவர் கொடுப்பது போன்றும் பல வேலைகளை செய்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

ஒன்றுமே இல்லாத விஷயம்
இப்படி வித்தியாசமாக ஏதாவது செய்தால் புரமோவில் இடம் பெற்று விடலாம் என்பதை முழுமையாக நம்பினார் அனிதா. இதற்காக தன்னால் முடிந்தவரை ஏதாவது செய்வது, அடிக்கடி ஒன்றும் இல்லாத விஷயத்தை எல்லாம் ஊதி பெரிதாக்குவது என்று இருந்து வந்தார்.

வம்படியாய் பிரச்சனை
குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அனிதாவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. சுரேஷ் சக்கரவர்த்தியிடம் வம்படியாய் பல பிரச்சனைகளை செய்து அவரை டார்கெட் செய்து வந்தார்.

சம்யுக்தா வெளியேற்றம்
சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதும், சோமிடம் நல்ல வேளை நீ போகவில்லை என்று சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். நாமினேஷனில் இல்லாத சம்யுக்தாவை நாமினேட் செய்து அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வழிவகை செய்தார்.

ரியோவை டேமேஜ் செய்து
தொடர்ந்து தன்னை ஜெயிலுக்கு அனுப்பியதற்காக ரியோவிடமும் மல்லுக்கு நின்றார். மேலும் அதை கமலிடம் பேசியதோடு, அந்த விவாகரத்தை மீண்டும் பேசி ரியோவை டேமேஜ் செய்தார்.

யாரும் பேசவே கூடாது
பாலாஜி, ரியோ, சோம், ஆரி என ஹவுஸ்மேட்ஸ் யாராக இருந்தாலும் தன்னை பற்றி பேசவே கூடாது என்று வாக்குவாதம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
தான் மட்டுமே மற்றவர்களின் குறைகளை எல்லாம் சொல்ல வேண்டும், தன்னை பற்றி பேசினாலே வாயாலடித்து சண்டை போட்டு வந்தார்.

ஓவர் ஆட்டியூட்
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அனிதா ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட விவகாரத்தில் அனிதாவுக்கு ஆதராவாய் இருந்தார் கமல். அப்போது முதலே அனிதா ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

மோசமான பிஹேவிங்
இந்நிலையில் கடந்த வாரம் மாட்னீயா டாஸ்க்கின் போது ஆரி டீமோட்டிவேட்டர் என்று கூறி அனிதா குறித்து பேச தொடங்கினார். அப்போது அனிதா தனது குடும்பத்தினரை ஆரி தவறாக பேசுவது போன்று காட்ட முயற்சித்து மோசமாக நடந்து கொண்டார்.

ரசிகர்கள் கோரிக்கை
குடும்பத்தி பத்தி பேசாதீங்க ஆரி என்று உதட்டைக்கடித்து கையை நீட்டி ஆக்ரோஷமாக பேசினார். அதனை பார்த்த நெட்டிசன்ஸ் அனிதாவை இந்த வாரம் வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

அனிதா அட்மின் பதிவு
இந்நிலையில் நாளைக்கான எபிசோட் இன்றே காட்சியாக்கப்பட்ட நிலையில் காலை முதலே அனிதா வெளியேற்றப்பட்ட தகவல்கள் தீயாய் பரவி வந்தது. அது உண்மையா என்று அதிகாரப்பூர்வமாக நாளை எபிசோடி ஒளிப்பரப்பாகவுள்ள நிலையில், அனிதாவின் அட்மின் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் நன்றி
அதாவது, எல்லாவற்றுக்கும் நன்றி என கையெடுத்து கும்பிடும் ஈமோஜியை ஷேர் செய்து பதிவிட்டுள்ளார். அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து அவரது கணவரான பிரபாகரன் தான் அவரது சமூக வலைதள கணக்குகளை கையாண்டு வந்தார்.

ஆணவச் சிரிப்பு.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன், மத்தவங்க பேசும்போது சிரிச்சது ஆணவச் சிரிப்பு.. எவ்வளோ தப்பா சொன்னாலும் ஆரி முகத்த பாருங்க.. சாந்தம்.. அதுதான் சீக்ரெட். ஆரிய எதிர்த்து பேசிட்டு அனிதா தன்னை அறியாமலேயே ரம்யாகிட்ட தன்னை அடமானம் வச்சுட்டாங்க.. ரம்யா அருமையா ஏத்து ஏத்துன்னு ஏத்திவிட்டு சாரி கேக்கவிடாம பாத்துகிச்சு.. பைபை என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











