பிளான் போட்டு நாமினேஷன் டாப்புள் பாஸை தட்டி தூக்கிய அனிதா.. அம்பலமான உண்மை.. என்னா ஸ்ரேட்டர்ஜி!

சென்னை: பிக்பாஸ் வழங்கிய நாமினேஷன் பாஸை அனிதா பிளான் போட்டு கைப்பற்றிய உண்மை அம்பலமாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நாமினேஷன் டாப்புள் பாஸ் கொடுக்கப்பட்டது.

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்த பாஸ் வழங்கப்பட்டது.

7 பேர் பங்கேற்பு

7 பேர் பங்கேற்பு

இதில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றவர்கள் பங்கேற்றனர். அதன்படி, பாலஜி, ஜித்தன் ரமேஷ், சோம் சேகர், ஆரி, சனம் ஷெட்டி, அனிதா மற்றும் நிஷா ஆகிய 7 பேர் பங்கேற்றனர்.

அவருக்கு பதிலாய்

அவருக்கு பதிலாய்

7 பேரில் அந்த பாஸை பெறும் ஒரு போட்டியாளர், நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம். தப்பிக்கும் அந்த நபர் அவருக்கு பதிலாய் மற்றொருவரை நாமினேட் செய்யலாம். இதற்கான போட்டி ஆக்டிவிட்டி ஏரியாவில் நடந்தது.

நிஷாவுக்கு மெஜாரிட்டி

நிஷாவுக்கு மெஜாரிட்டி

இந்த போட்டியில் இருந்து பாலாஜி, ஆரி, சோம், ரமேஷ் ஆகியோர் விலகினர். அனிதா, நிஷா, சனம் ஷெட்டி ஆகியோர் விடாப்பிடியாக விளையாடினர். இதில் முதலில் மெஜாரிட்டியான வாக்குகளை பெற்றது நிஷாதான்.

விட்டுக்கொடுக்காத அனிதா

விட்டுக்கொடுக்காத அனிதா

ஆனால் சனமும் அனிதாவும் விட்டே கொடுக்காமல் இருந்தனர். இதனால் மூன்று பேருக்குள்ளும் கடுமையான போட்டி ஏற்பட்டது. நீண்ட நேரம் போட்டி தொடர்ந்ததை அடுத்து சனம் ஷெட்டி தனக்கு மக்கள் மேல் நம்பிகை உள்ளது, நான் விலகுகிறேன் என்று கூறினார்.

நீங்களே வச்சுக்கோங்க

நீங்களே வச்சுக்கோங்க

அப்போதும் அனிதா விட்டுக்கொடுக்கவில்லை. எனக்கு வேண்டும் என்று பிடிவாதமாக நின்றார். பின்னர் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு, நீங்களே வச்சுக்கோங்க, கேம்ம முடிக்கணும் என்று நிஷாவிடம் கொடுத்தார்.

சந்தோஷமாய் கொடுங்கள்

சந்தோஷமாய் கொடுங்கள்

இதனால் கடுப்பான நிஷா, நீ என்ன எனக்கு பிச்சை போடுறீயா? இந்த மாதிரி சொல்லிட்டு கொடுக்காத, அப்படின்னா நீயே வச்சுக்கோ எனக்கு மக்கள் மேல நம்பிக்கை இருக்கு என்றார். இதனை தொடர்ந்து அதனை வாங்க சம்மதித்த அனிதா, சந்தோஷமாய் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டு நாமினேஷனில் இருந்து தப்பினார்.

சம்யுக்தா நாமினேட்டட்

சம்யுக்தா நாமினேட்டட்

மேலும் சம்யுக்தாவை நாமினேட் செய்துவிட்டு எஸ்கேப்பாகி விட்டார். இந்நிலையில் இதுகுறித்து மிட் நைட்டில் பாலாஜியுடன் பேசிக்கொண்டிருந்தார் அனிதா. அப்போது நீ அல்லது சனம் விட்டுக்கொடுத்திருக்கலாம் என்றார் பாலாஜி.

சம்யுக்தாவ அனுப்பனும்

சம்யுக்தாவ அனுப்பனும்

அதற்கு பதில் சொன்ன அனிதா, அதுதான் என் ஸ்ட்ரேட்டர்ஜி. அது நிஷாவுக்கு கிடைச்சுருந்தா, ஆஜித்தான் நாமினேட் பண்ணியிருப்பாங்க. சனம்க்கு கிடைச்சுருந்தா ஷிவானியதான் வெளியே அனுப்பியிருப்பார். சம்யுக்தா ஃபேக்கா விளையாடுறாங்க, அவங்கள வெளியே அனுப்பனும்னுதான் நான் அந்த பாஸை வாங்கினேன்.

அம்பலமான உண்மை

அம்பலமான உண்மை

நான் நாமினேட் ஆகாமல் இங்கே இருந்தால் தான் அவர்களை வச்சு செய்ய முடியும். அதற்காகதான் நாமினேஷன் பாஸை வாங்கினேன் என பச்சையாக கூறினார். ஆக ஸ்கெட்ச் போட்டு எப்படி சொன்னால் அது தனக்கே கிடைக்கும் என பிளான் பண்ணி நாமினேஷன் டாப்புள் பாஸை தட்டி தூக்கியுள்ளார் அனிதா என்பது அம்பலமாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X