என்னை பேசவேவிடவில்லை.. ஒரு சைடா பேசினார்.. கமலையே கடுமையாக விமர்சித்த அனிதா சம்பத்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சார்பாக நடந்து கொண்டார் என்று கமல் மீது அனிதா சம்பத் கூறிய குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில், சம்யுக்தா கூறிய ஐடியாலஜி குறித்து ஏற்கனவே கமலிடம் பேசியபோதும் மீண்டும் அதுகுறித்து பேச வந்தார் அனிதா சம்பத்.
அப்போது நீங்கள் இதைப்பற்றி இரண்டு நிமிடத்திற்கு முன்புதான் பேசினீர்கள், எனக்கு புரிந்துவிட்டது. வேண்டுமென்றால் அவங்களை தனியா கூப்ட்டு பேசுங்கள் என கூறிவிட்டார்.

கமல் குறித்து விமர்சனம்
இதனால் அனிதாவின் முகம் அப்படியே மாறிவிட்டது. கமலுக்கு எதிரேயே முகத்தில் தனது ரியாக்ஷனை அப்படியே காட்டிவிட்டார். தொடர்ந்து கமலின் இடைவேளையின் போது சனம் ஷெட்டியிடம் பேசிய அனிதா, கமல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஒரு சைடாக பேசினார்
அதாவது, கமல் சார் எனை பேசவே விடவில்லை. ஆரம்பித்தில் இருந்தே இப்படிதான் நடக்கிறது. ஆரியை பற்றி பேசியபோது சிரிக்கிறார். ஆரி பேசுவதைதான் கேட்கிறார். இன்றைய எபிசோடில் முழுக்க முழுக்க ஒரு சைடாவே பேசினார்.

சனம் பதில்
என்னை பேசவும் விடவில்லை, நான் பேசியதையும் கேட்கவில்லை என சனம் ஷெட்டியிடம் கமல் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அதனைக் கேட்ட சனம், இல்லை சுரேஷ் தாத்தாவுடனான பிரச்சனை மற்றும் சுமங்கலி பிரச்சனை போதெல்லாம் கமல் சார் உனக்கு ஃபேவராக தான் பேசினார்.

தான்தான் நியாயம்
உன் மீது ஏதாவது வருத்தத்தில் இருக்கலாம். உன்னை பற்றி ஏதாவது புகார் வந்திருக்கலாம் மற்றப்படி நீ ஒன்றும் பெரிய குற்றம் ஏதும் செய்திருக்க மாட்டாய் என சப்போர்ட் செய்தார் சனம் ஷெட்டி. அதற்கு நான் என்ன செய்தேன் என்றே தெரியலைடா, நான் உன்கிட்டதான பேசிட்டு இருக்கேன் என்று மீண்டும் தான் நியாயம் என்பதை போல் பேசினார்.

தொடர்ந்து குற்றச்சாட்டு
அதற்கு என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை என்று சனம் ஷெட்டி கூறினார். தொடர்ந்து கமல் தன்னை பேச விடவில்லை, ஒரு சார்பாக நடந்து கொண்டார் என குற்றம்சாட்டிக் கொண்டே இருந்தார் அனிதா சம்பத்.

மனநல மருத்துவரை பாருங்கள்
அதனை பார்த்த ரசிகர்கள், கமல் ஒரு சார்பாக நடக்கிறார் என்பதெல்லாம் ஓவர் என அவரை விளாசி வருகின்றனர். கடைசியில் கமலையே குற்றம் சொல்ல ஆரம்பித்து விட்டாயா என்றும் நல்ல மனநல மருத்துவரை பாருங்கள் என்றும் சாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











