பிக் பாஸ் ஜோடியில் அனிதா செய்த தரமான சம்பவம்… வியந்து பாராட்டிய நடுவர்கள் !

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அனிதா பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எடுத்த அதிரடி முடிவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அனிதா சம்பத் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.

இவர்கள் இருவரும் கண்களை மூடிக்கொண்டு ஆடிய ப்ரமோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 4

பிக் பாஸ் சீசன் 4

சன் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்த அனிதா, கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். பிக் பாஸ் இல்லத்தில் 84 நாட்கள் வரை இருந்த அனிதா பின்னர் எவிக்ஷன் செய்யப்பட்டு வெளியேறினார். பிக் பாஸ் சீசன் 4ல் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர்.

சொந்த யூடியூப் சேனல்

சொந்த யூடியூப் சேனல்

பிக் பாஸ் இல்லத்தில் பல விமர்சனங்களில் அவ்வப்போது சிக்கிக்கொள்ளும் அனிதா சம்பத், பல தடைகளை உடைத்து தனக்கென தனி ரசிகர்களையும் கொண்டிருக்கிறார். தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்தவர், அதில் ஏராளமான பயனுள்ள காணொளிகளை அப்லோட் செய்து வருகிறார். 6 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்களை அனிதா வைத்து இருக்கிறார்.

கண்தானம் செய்த அனிதா

கண்தானம் செய்த அனிதா

தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் அனிதா மற்றும் உமா ரியாஸ் கானின் மகன் ஷாரிக்குடன் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். சமீபத்தில் இவர்கள் இருவரும் கண்களை கட்டிக்கொண்டு குதித்தும் , தாவியும் ஆடி உள்ளனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ள நிலையில், அந்த ப்ரோமோவில் அனிதா, கண் என்பது எவ்வளவு முக்கியம் என்றும், கண்தானம் குறித்த முக்கியத்துவதை உணர்ந்த நான் இன்று கண்தானம் செய்ய உள்ளதாகவும் அனிதா சம்பந்த் கூறியுள்ளார்.

பாராட்டு

பாராட்டு

அனிதா ஷாரிக்கின் நடனத்தை வியந்து பார்த்த நடுவர்களான நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் இருவரையும் வியந்து பாராட்டி உள்ளனர். மேலும், அனிதாவின் கண்தான முடிவுக்கு பாராட்டு தெரிவித்தனர். இதே போல அனிதாவின் ரசிகர்களும் அவரை வெகுவாக பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டேனி படத்தில்

டேனி படத்தில்

அனிதா சம்பத் காப்பான் படத்தில் செய்தியாளராகவே வந்திருப்பார். மேலும், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான டேனியில் வரலட்சுமியின் தங்கையாக நடித்திருந்தார் அனிதா சம்பத். இத்திரைப்படம் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X