மிரட்டல் மொட்டை.. வேட்டி மடிச்சுக் கட்டி இளைஞர்களை ஆட்டம் காண வைத்த அனிதா.. தல நீ வேற லெவல்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10ம் நாள் எபிசோடில் சின்ன மச்சான் செல்ல மச்சான் பாட்டுக்கு அனிதா சம்பத்தும், சுரேஷ் சக்கரவர்த்தியும் ஜோடி போட்டு ஆடி ரசிகர்களை மிரள வைத்தனர்.

எச்சித் தெறிக்கும் சண்டையில் ஆரம்பித்து எருமை மாடு சண்டை வரை முட்டிக் கொண்டு இருந்த இருவரும், எல்லாத்தையும் துடைச்சு போட்டுட்டு ஜோடி போட்டு ஆடியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

டாஸ்க்குன்னு வந்துட்டா உப்பு போடாமலும் சோறு திண்பார் சுரேஷ் என்பது நேற்றைய எபிசோடில் நல்லாவே தெரிந்தது.

மிரட்டல் மொட்டை

மிரட்டல் மொட்டை

பிக் பாஸ் தமிழ் 4ல் வனிதா விஜயகுமாரை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு வேற லெவல் கேம் ஆடி வருகிறார் நம்ம மிரட்டல் மொட்டை சுரேஷ் சக்கரவர்த்தி. எத்தனை பேரு வேணா வாங்கடா, வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன் என்பது போல, வெளுத்து வருகிறார். நேற்றைய டான்ஸ் வேற லெவல் ஹைலைட் என்று தான் சொல்ல வேண்டும்.

வேட்டியை தூக்கிக் கட்டி

வேட்டியை தூக்கிக் கட்டி

அடடா என்ன ஒரு அழகுடா அனிதா செல்லக்குட்டி என பிக் பாஸ் ரசிகர்களை லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட வைத்து விட்டார். அவங்களுக்கான பெட்டி வந்தவுடன், உடனடியாக டிரெஸ் எடுத்துக்கிட்டு, பாத்ரூம் போன அவர், மற்ற பெண் போட்டியாளர்களை விட டக்குன்னு டிரெஸ் பண்ணிக்கிட்டு வெளியே வந்துட்டார். ஏன்னா அது பாய்ஸ் டிரெஸ்.

மொரட்டுக் குத்து

மொரட்டுக் குத்து

சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவாவும், நிக்கி கல்ராணியும் தான் "சின்ன மச்சான்" பாட்டுக்கு டான்ஸ் ஆடுனாங்கன்னு இனி யாரும் சொல்ல மாட்டாங்க. அனிதாவும் மொட்டை சுரேஷும் தான் ஆடுனாங்கன்னு சொல்வாங்க அந்த அளவுக்கு மொரட்டுக் குத்தாக இருந்தது அந்த ஆட்டம்.

அனிதா புருஷன் பாவம்

அனிதா புருஷன் பாவம்

சோமசேகர் அனிதா மேல கையை போட்டு போனதுக்கே ஏகப்பட்ட மீம் கிரியேட்டர்கள் வச்சு செய்தனர். இப்போ, வயசான தாத்தா மொட்டை தல சுரேஷ் சக்கரவர்த்தி உடன் கொஞ்சி குலாவி வேட்டியை முட்டித் தெரிய மடிச்சுக் கட்டி ஆடியதை எல்லாம் பார்த்தா எப்படியெல்லாம் வச்சு செய்வாங்களோ.. பாவம் அனிதா புருஷன்.

அவ வயசு என்ன உன் சைஸு என்ன

அவ வயசு என்ன உன் சைஸு என்ன

அனிதா சம்பத்தும், சுரேஷ் சக்கரவர்த்தியும் சேர்ந்து டான்ஸ் ஆடுறாங்கன்னு புரமோ போட்டதுமே, ஏகப்பட்ட மீம் கிரியேட்டர்களும், நெட்டிசன்களும் கமெண்ட்டுகளால் கலாய்த்து எடுத்தனர். அவ வயசு என்ன பெருசு உன் சைஸு என்ன என்று மரண பங்கமாக ஓட்டி எடுத்தனர்.

Recommended Video

Bigg Boss 4 Tamil அத போட மறந்துட்டீயே Ajeedh • Day 10 | 14th October
துப்புன்னா துடைச்சிப்பேன்

துப்புன்னா துடைச்சிப்பேன்

உப்பு போட்டு சாப்பிடுற யாரும் அனிதா சம்பத் சமையல் பண்ற டீம்லயே இருக்க மாட்டான்னு ரோஷமா சொன்னவர், இப்போ அனிதா சம்பத், பாடுறேங்கிற பெயர்ல, ஏகப்பட்ட தடவை மொட்டை மூஞ்சியிலே எச்சத் தெறித்த போது, துப்புன்னா துடைச்சிப்பேன் என்கிற ரேஞ்சுக்கு, கொஞ்சி விளையாடினார் தாத்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X