யூட்யூபரான நியூஸ் ரீடர் அனிதா சம்பத்.. இதுக்கு என்னென்ன பஞ்சாயத்து வரப்போகுதோ!
சென்னை: நியூஸ் ரீடர் அனிதா சம்பத் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் யூட்யூபர் போன்று நடித்துக்காட்டினார்.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பங்கேற்றுள்ளார். தொடக்கம் முதலே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சையை கிளப்பி வருகிறார் அனிதா சம்பத்.
நேற்று செய்தி வாசிப்பதாக கூறி சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ஒரு ஏழரையை இழுத்தார். இந்நிலையில் இன்று யூட்யூபராக மாறி பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை வரிசைப்படுத்தினார்.

யூட்யூபர்
அப்படியே யூட்யூப் தளத்தில் வரும் வாய்ஸ் ஓவர் போன்று அச்சு அசலாக செய்தார் அனிதா சம்பத். அப்போது ஆரி தங்களுக்கு உடற்பயிற்சி செய்யக் கற்றுக்கொடுத்ததை பற்றி பேசினார்.

அரை ட்ரவுசருடன்
மேலும் அறந்தாங்கி நிஷா பகிர்ந்த தனது கடந்த கால வாழ்க்கை குறித்த தகவலையும் கூறி இதுவரை சிரிக்க வைத்த நிஷா அழ வைத்து விட்டார் என்றார். மேலும் சோமுவை அரை ட்ராயர் போட்டுக்கொண்டு பாத்திரம் கழுவுவதாக கூறி நக்கலடித்தார்.

அன்ஃபாலோயர்ஸ்
மேலும் அதனை பார்த்து அவரது வுமன் ஃபாலோயர்கள் எல்லாம் அன்ஃபாலோ செய்து விட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து ரியோவையும் யூட்யூபராக வச்சு செய்தார். அவரது அந்த ஆக்ஷன் ரசிக்கும் படியாக இருந்தது.

என்னென்ன பிரச்சனை வரபோகுதோ?
இருந்த போதும் இதனை பார்த்த நெட்டிசன்கள், இப்படியெல்லாம் செய்வதிலிருந்தே நீங்கள் ஒரு அட்டேன்ஷன் சீக்கர் என தெரிகிறது என்று விளாசியுள்ளனர். இன்னும் சிலர் இதன் மூலம் என்னென்ன ஏழரையை இழுக்கப்போகிறாரோ என மிரட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











