தாலியை கழட்டினா என்ன தப்பு? நெட்டிசன்களுடன் மல்லுக்கட்டும் பிக்பாஸ் அனிதா சம்பத்!
சென்னை: தாலியை கழற்றுவதில் எந்த தவறும் இல்லை என பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். 2.o, காலா, காப்பான் உள்ளிட்ட சில படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகை அனிதா சம்பத்.

நல்ல பெயர்
பாலாவின் இயக்கத்தில் உருவான அவன் இவன் திரைப்படத்தில் பெண் காவலாளியாக வந்து இருப்பார் ஜனனி. அந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதைடுத்து, பாகன், தெகிடி, அதே கண்கள் முப்பரிமாணம் பல திரைப்படங்களில் நடித்தார்.

ஆரியிடம் ருத்ரதாண்டவம்
அதன்பிறகு ஜித்தன் ரமேஷ், ரியோ, கேபி, சனம், நிஷா, ஆரி என அனைவரிடமும் முகத்தைக் காட்டினார். கடைசியாக ஆரியிடம் தனது உச்சக்கட்ட கோபத்தை காட்டி ருத்ரதாண்டவம் ஆடினார்.

நாக்கை துருத்தி
நாக்கை துருத்தியும் கைகளை நீட்டியும் அவர் பேசிய பேச்சு பெரும் வைரலானது. அவருடைய சுயரூபம் இதுதான் என்று சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றிய ரசிகர்கள் அவரை சொல்லி வைத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றினர்.

எப்போதும் ஆக்டிவ்
அனிதா சம்பத் வெளியே சென்ற நிலையில் அவரது தந்தை மரணமடைந்ததால் அவர் மீதான கோபம் மறைந்தது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அனிதா சம்பத் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

மல்லுக்கட்டும் அனிதா
ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். மேலும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் அனிதா சம்பத். இந்நிலையில் ஒரு போட்டோவை ஷேர் செய்து நெட்டிசன்களிடம் மல்லுக்கட்டி வருகிறார் அனிதா.

அழகாக இருக்கும்
அதாவது அனிதா சம்பத் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்தார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன் நெற்றியில் குங்குமம் வைத்தால் மேலும் ஒரு மடங்கு அழகாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
Recommended Video

விருப்பம் இல்லை
அதற்கு பதில் அளித்த அனிதா சம்பத், என் செய்தியை பார்ப்பவர்கள் எல்லா மதத்தையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு என் மதத்தை அடையாளப்படுத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை. குங்குமம், விபூதி, பூ, தாலி இவையெல்லாம் குறிப்பிட்ட மதத்தை குறிப்பவை.

மறைத்துக் கொள்வேன்
எனவே அவற்றை நான் பின்பற்றுவதில்லை. யாவரும் கேளிர் என பதிவிட்டிருந்தார். மேலும் தாலியை கழற்றுவதில்லை. மறைத்துக்கொள்வேன். மதத்தை அடையாளப்படுத்த விரும்பாமல்தான்.

கழற்றினால் தவறில்லை
ஆனால் அப்படியே கழற்றினாலும் அதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அனிதா சம்பத் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் பங்கேற்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக்கிற்கு ஜோடியாக நடனமாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications











