அனிதா சம்பத்தா இப்படி மாறிட்டாரு? டபுள் மீனிங் கமெண்ட்டுக்கு இப்படியொரு ரியாக்‌ஷனை எதிர்பார்க்கல!

சென்னை: அனிதா சம்பத் தனது கணவர் பிரபா உடன் இணைந்து வெளியிட்ட ரீசன்ட் ரீலை பார்த்த ரசிகர்கள் அனிதா சம்பத் கர்ப்பமாக உள்ளாரா என கேள்வி எழுப்பியதோடு நிறுத்தாமல் அவருக்கு அடுக்கடுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

ஒரேயடியாக இப்படி வாழ்த்துக்கள் வருகிறதே, இதற்கு எண்ட் கார்டு போட்டு விடலாம் என நினைத்து அனிதா சம்பத் விளக்கம் ஒன்றை கொடுத்து இருந்தார்.

அந்த விளக்கத்திற்கு கீழ் வந்த அப்படியொரு மோசமான கமெண்ட்டுக்கு அனிதா சம்பத் கொடுத்த ரியாக்‌ஷனை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

செய்தி டு சினிமா

செய்தி டு சினிமா

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு ஏகப்பட்ட நடிகைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்த ஒரு சிலரில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார் அனிதா சம்பத். சன் டிவி செய்தி வாசிப்பாளரான இவர், காப்பான், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பெரிய பிளாட்ஃபார்ம்

பெரிய பிளாட்ஃபார்ம்

செய்தி வாசிப்பைத் தாண்டி தனக்குள் இருக்கும் நடிகையை வெளிக் கொண்டு வர நினைத்த அனிதா சம்பத்துக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய பிளாட்ஃபார்மாக இருக்கும் என நினைத்து அங்கு சென்றார். பிக் பாஸ் 4வது சீசன் மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் என தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற அனிதா சம்பத்துக்கு ரசிகர்களை விட ஹேட்டர்கள் சற்று அதிகமாகி விட்டனர்.

ஆபாச ட்ரோல்கள்

ஆபாச ட்ரோல்கள்

அனிதா சம்பத் பிக் பாஸ் சீசன் 4ல் ஆரியை எதிர்த்து நாக்கைக் கடித்துக் கொண்டு கத்தியதை பார்த்த ஆரி ரசிகர்கள் அனிதா சம்பத்தை பயங்கரமாக ட்ரோல் செய்தனர். பின்னர், ஆரியுடன் இணக்கமான போக்கிற்கு சென்ற அனிதா சம்பத் ஆரி ரசிகர்களிடம் இருந்து தப்பித்தார். பாலா மற்றும் அனிதாவுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக சமூக வலைதளங்களில் இன்னொரு பெரிய ஆடியோ சர்ச்சையே ஓடியது. பின்னர் அதுவும் சுமூகமாக முடிவுக்கு வந்தது.

அனிதா கர்ப்பமா

அனிதா கர்ப்பமா

கடந்த 2019ம் ஆண்டு அனிதா சம்பத் தனது காதலர் பிரபாகரனை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவருடன் சேர்ந்து தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எல்லாம் போட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், 'எப்போது நீங்கள் கர்ப்பம் ஆவீர்கள்" என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அனிதா சம்பத் கர்ப்பமாக இருக்கிறார் என நினைத்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

கர்ப்பமாக இல்லை

கர்ப்பமாக இல்லை

தொடர்ந்து ரசிகர்கள் இப்படி வாழ்த்துக்களை சொல்லி வராங்களே என நினைத்த அவர், அது வெறும் ரீல்ஸ் தாங்க.. உண்மையிலேயே நான் இன்னும் கர்ப்பமாக இல்லை என விளக்கம் கொடுத்து இருந்தார். அந்த விளக்கத்திற்கு கீழ் தான் ரசிகர் ஒருவர் டபுள் மீனிங்கில் அப்படியொரு கமெண்ட்டை போட்டிருந்தார்.

லைட் ஆஃப் பண்ணிட்டு

லைட் ஆஃப் பண்ணிட்டு

"இப்படி ரீல்ஸ் வீடியோ போடுறதுக்கு பதில், லைட் ஆஃப் பண்ணிட்டு ஒழுங்கா வேலையை பார்த்திருந்தா.. இந்நேரம் கர்ப்பமாக ஆகியிருப்பீங்க" என நெட்டிசன் ஒருவர் டபுள் மீனிங் உடன் கமெண்ட் போட்டதை பார்த்த அனிதா சம்பத் அந்த நெட்டிசனை விளாசி தள்ளுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அனிதாவின் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செம கூல் அனிதா

செம கூல் அனிதா

ஆனால், இந்த முறை அனிதா தனது கோபத்தை வெளிப்படுத்தாமல் அந்த நெட்டிசனின் கமெண்ட்டுக்கு வெறும் ஸ்மைலி எமோஜிகளை மட்டும் போட்டிருந்தது தான் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கோபக்கார அனிதா என்கிற பேச்சை மாற்றி செம கூல் அனிதாவாக மாறிவிட்டாரே என பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X