Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு!
சென்னை: இந்த பிக் பாஸ் வீடு ஒரு போட்டிக் களம் என்கிற டாப்பிக்கில் அனிதா சம்பத் பேசி, வேல்முருகனுக்கு சரியான ஆப்பு வைத்து விட்டார்.
ப்பா அனிதாவா, சும்மா பேச சொன்னாலே ஒரு மணி நேரம் பேசுவா என அலறிய நிலையில், அழகான தமிழில் ஒரு மணி நேரமே பேசி பிளேடு போட்டுட்டார்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ரம்யா கிட்ட பேசி வாங்கிய பாயிண்ட்களை அப்படியே மேடையில் பேசி டபுள் கேமும் ஆடிட்டார்.
ஹிப் ஹாப் தமிழாவை இழுத்து விட்ட சோம்ஸ்.. கேபி, தாத்தா சென்டிமென்ட்டை வச்சி ஓட்டிய சம்ஸ்!
போட்டிக் களம்
பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்கரவர்த்தி, நிஷா டீமில் இருந்த அனிதா சம்பத், பிக் பாஸ் வீடு ஆனந்தமான அன்பான வீடெல்லாம் கிடையாதுங்க, இது ஒரு போட்டிக் களம் தான், நானும் இங்கே போட்டிப் போடத்தான் வந்தேன். ஆரம்பத்தில் இருந்தே சுரேஷுடன் சண்டை போட்டது எல்லாமே என் கேம் பிளான் தான் என ஒப்புக் கொண்டது போல பேசினார்.
வேல்முருகனுக்கு ஆப்பு
ஆரம்பமே, முன்னதாக அன்பான வீடு என பேச வந்த டாப்பிக்குக்கு பதிலாக வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது என நடுவருக்கு ஸ்கூல் பசங்களாம் வைக்கும் அரை மணி நேரம் ஐஸை வைத்து சென்ற வேல்முருகனை, அனிதா சம்பத் பேச ஆரம்பித்த அடுத்த நொடியிலே ஆப்படிச்சு அனுப்பிட்டாங்க..
தக்காளி சட்னி
உனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்பது போல, ஆனந்த வீடு, எல்லாரும் ஒரு தாய் மக்கள்னு பேசுனீங்களே, அன்னைக்கு மட்டும் உங்கள எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க என நாக்கைப் பிடுங்குவது போல கேட்டு அனிதா சிக்ஸர் அடித்து விட்டார். சுரேஷுக்கு அடுத்து இவரைத் தான் ஈசியா வம்பிழுக்க முடியும் பக்கா கில்லாடிமா நீ..
வத்திக்குச்சி வனிதா தாம்மா
ரம்யா பேசி முடிச்ச பிறகு விட்ட இடைவேளையின் போது ஆஜித் பத்தி பேசிய அனிதா சம்பத், அடுத்து தனது ரவுண்ட் வரும் போது, அதைப் பத்தியே பேசி, டபுள் கேம் ஆடி ஸ்கோர் பண்ணிட்டாரு. மேலும், ஆஜீத்துக்கு ரம்யா விட்டுக் கொடுக்கல, எல்லாரும் அதை சொன்னா, அவனுக்கு டென்ஷன் ஆகாதா என்று ஐஸ் வைத்து ரம்யாவை ஈஸியா டென்ஷன் பண்ணிட்டார் அனிதா. நீ வத்திக்குச்சி வனிதா தாம்மா..
நிஷாவோட செருப்பு
எல்லாத்தையும் விட பேசி முடிச்சுட்டு போய் உட்கார்ந்த பிறகு, நிஷாகிட்ட செருப்பை கழட்டி கொடுத்தவுடன் எல்லாரும், இது பாசம் தானே என கேட்க, நான் பேசும் போது ஹைட்டா தெரியணும்னு வாங்கி போட்டுகிட்டு போனேன் அது என்னோட கேம் என கடைசி வரைக்கும் தன்னோட நரி தந்திரத்தை பக்காவா பிளான் பண்ணி விளையாடி அசத்தினார் சமத்து அனிதா.