என் புருஷன நான் ரொம்ப லவ் பண்றேன் பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி துடித்த கண்ணுக்குட்டி அனிதா!
சென்னை: கன்ஃபெஷன் ரூமில் பிக்பாஸிடம் பேசிய அனிதா சம்பத் என் புருஷன நான் ரொம்ப லவ் பண்றேன் பிக்பாஸ் என கதறியழுதது பதற வைத்தது.
Recommended Video
பிக்பாஸ் வீட்டின் இன்றைய எபிசோடில் அனிதா சம்பத் அழுதே கழித்தார்.
எப்போதும் ஆடியன்ஸ் என்ன நினைப்பார்களோ என்ற பதற்றத்தில் உள்ள அனிதா சம்பத், இன்றைய எபிசோடில் ரொம்பவே அழுது பார்வையாளர்களை கலங்க வைத்து விட்டார்.

ஏன் சோகமா இருக்கீங்க?
சோகமாக இருந்த அனிதாவை கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்தார் பிக்பாஸ். கன்ஃபெஷன் ரூமூக்குள் சென்ற அவரிடம் என்ன அனிதா ஹாயை காணோம் என்றார் பிக்பாஸ். பின்னர் ஹாய் பிக்பாஸ் என்ற அனிதாவிடம் என்ன சோகமா இருக்கீங்க என்று கேட்டார்.

லோன்லியா இருக்க மாதிரி
அதற்கு இங்கு வெளிப்படையாக பேசுவது பிரச்சனையாகிறது. நான் ஃபிராங்க்கா பேசுவது சில பேருக்கு பிடிக்கவில்லை. எனக்கு எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை. கொஞ்சம் லோன்லியா இருக்க மாதிரி ஒரு ஃபீல் இருக்கு.

மனசளவுல போராட்டம்
ஏன்னா பொதுவா நான் ஃபன் பண்ற பொண்ணு கிடையாது. மனசில் பட்டதை அப்படியே பேசி விடுவிவேன். பிரச்சனை வந்தா கூட என் சைடு யாரும் நிக்காத மாதிரி ஒரு கஷ்டம். பிடிச்சவங்க சொன்னதா எடுத்துக்குறதா இல்ல நம்ம நினைச்சத எடுத்துக்குறதான்னு ஒரு போராட்டம் வருது மனசளவுல.

அதுதான் கேம் அனிதா
ஒரு நெகட்டிவ் ஃபீல் மைண்ட்ல இருந்துக்கிட்டே இருக்கு. என்கிட்டதான் நிறைய மிஸ்டேக் போல அப்படின்னு ஒரு கன்ஃபியூஷனா இருக்கு பிக்பாஸ் என்றார் அனிதா. அனிதா பேசியதைக் கேட்ட பிக்பாஸ் நீங்கள் நீங்களாக இருப்பதுதான் இங்கே கேம்.

கண்ணுக்குட்டியை கேட்டார்
நீங்கள் நீங்களாக இருங்கள், தோன்றுவதை பேசுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். நாங்கள் உங்கள் கணவரிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். அவரும் கண்ணுக்குட்டியை கேட்டதாக சொல்லுங்கள் என்று கூறினார் என்றார் பிக்பாஸ்.

ரொம்ப லவ் பண்றேன்
அதனைக் கேட்ட அனிதா, முகத்தை மூடிக் கொண்டு பயங்கரமாக கதறி அழுதார். நான் என் புருஷன ரொம்ப லவ் பண்றேன் பிக்பாஸ், அவன ரொம்ப மிஸ் பண்றேன்னு அவன்கிட்ட சொல்லிடுங்க பிக்பாஸ் என்று கூறி பயங்கரமாக கதறி அழுதார் அனிதா.


Click it and Unblock the Notifications











