அவங்கள்லாம் இருப்பாங்க.. நான்தான் போயிடுவேன்.. என் புருஷன் பேரு கெட்டுடும்.. கதறியழுத அனிதா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போனால் தன்னுடைய கணவரின் பெயர் ஸ்பாயில் ஆகிவிடும் என கண்ணீர் விட்டு அழுதார் அனிதா சம்பத்.
Recommended Video
பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதலே தேவையில்லாமல் பேசிவிட்டு கண்ணீர் விட்டு அழுது வருபவர் அனிதா சம்பத்.
குறிப்பாக சுரேஷ் சக்ரவர்த்தியை தேவையில்லாமல் சீண்டுவதும், அவரிடம் மரியாதைக் குறைவாக பேசுவதுமாய் இருந்தார் அனிதா சம்பத்.

புரமோவில் இடம்
சுரேஷ் சக்கரவர்த்திக்கு எதிராக எல்லாவற்றையும் பேசுவதும் செய்வதுமாய் இருந்து விட்டு பின்னர் அவர் மீது தப்பே இல்லாதது போல் கண்ணீர்விட்டு அழுது வருகிறார். எப்போதும் மக்கள் என்ன நினைப்பார்கள், எதைக் காட்டுவார்கள் என்ற எண்ணத்தில் இருக்கும் அனிதாவுக்கு புரமோவில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணமும் அதிகம் உள்ளது.

கார்டன் ஏரியா..
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இதில் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தார் அனிதா. இதனை தொடர்ந்து கார்டன் ஏரியாவில் ஆரியுடன் பேசிய அனிதா, ஆஜித் எவிக்ஷன் ஃபிரி பாஸை பயன்படுத்திக் கொள்வார்.

காரணம் சொன்ன அனிதா
இதேபோல் பாலாஜி, சுரேஷ், ஆகியோர் எல்லாம் இருப்பார்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு காரணத்தை சொன்ன அனிதா, நான்தான் வெளியே போயிவிடுவேன் என கதறினார். அதற்கு ஆரி, யார் வெளியே போக வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

என் கணவர்தான் வின்னர்
உடனே அனிதா மனசில் பட்டதை பேசியதுதான் தப்போ. நான் மனசில் இருந்ததை பேசியிருக்கக்கூடாது என்றார். மேலும்
என்னை பிடிக்கிறவங்களுக்கு என் கணவரை ரொம்ப பிடிக்கும். அவனுக்கு பிக்பாஸ் கேம் ரொம்ப பிடிக்கும், அவனெல்லாம் பிக்பாஸுக்கு வந்தால் அவன்தான் வின்னர்.

கணவரின் பெயர்
நான் வெளியே போறது பிரச்சனையில்லை. ஆனால் நல்லப் பெயரோடு போக வேண்டும் என கண்ணீர் விட்டார். என் கணவரின் பெயர் கெட்டுவிடுமோ என தோன்றுகிறது. வெளியே எப்படி இருக்கு என்று தெரியவில்லை என கண்ணீர்விட்டு புலம்பினார் அனிதா.


Click it and Unblock the Notifications











