என்னையும் பேச விடுங்க .. நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல.. கதறி அழுத அனிதா !

சென்னை : நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக போட்டியாளர்களுக்கு பதிலாக பிக் பாஸ் கொளுத்தி போட்டுவிட்டார்.

Recommended Video

Rio விடம் மல்லுக்கட்டிய Anitha | எனக்கு மரியாதையே இல்ல Day 15

இதனால் பிக்பாஸ் வீட்டில் வழக்கம்போல பல சண்டைகள் சச்சரவுகள் வர வேல்முருகன் என்னவென்றே புரியாமல் தனது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்.

இந்நிலையில் ரியோவிடம் பேசிக் கொண்டிருந்த அனிதா சம்பத் திடீரென கதறி கதறி அழுது ஆதங்கங்களை கொட்டியுள்ளார்.

போர்க்களம் ஆக்கியது

போர்க்களம் ஆக்கியது

வழக்கம்போல பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமே சக போட்டியாளர்களின் சண்டைக்கு காரணமாக இருந்து வந்த நிலையில் பிக் பாஸ் சில தந்திரமான வேலைகளில் ஈடுபட்டு நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்குகள் பிக்பாஸ் வீட்டையே போர்க்களம் ஆக்கியது.

கேப்ரில்லா அதிரடியாக நுழைந்து

கேப்ரில்லா அதிரடியாக நுழைந்து

ஒருபுறம் சனம் செட்டிக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் துணி துவைப்பதில் முட்டிக் கொள்ள, அதில் கேப்ரில்லா அதிரடியாக நுழைந்து சனம் ஷெட்டிக்கு நோஸ்கட் கொடுத்தார்.

சிக்கித் தவித்தனர்

சிக்கித் தவித்தனர்

இவ்வாறு பல்வேறு சுவாரஸ்யங்கள் நிகழ்வுகளுடன் தொடங்கிய நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட "ட்ரூத் ஆர் டேர்" போட்டியில் அடுத்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஆஜித், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத் உள்ளிட்டோர் பாதுகாப்பு செய்யப்பட்டதால் மற்ற போட்டியாளர்கள் செய்வதறியாது சிக்கித் தவித்தனர்.

டேமேஜ் ஆக்கப்பட்டனர்

டேமேஜ் ஆக்கப்பட்டனர்

சொல் அல்லது செய் என இக்கட்டான விளையாட்டு விளையாட அதில் ரியோ, நிஷா, வேல்முருகன் என பலரும் டேமேஜ் ஆக்கப்பட்டனர்.

கதறிக் கதறி அழுதார்

கதறிக் கதறி அழுதார்

ஒரு வழியாக இந்த வில்லங்கமான டாஸ்க் பல சண்டைகளுடன் முடிய இறுதியில் இதைப்பற்றி அனிதா சம்பத், ஆரி, ரியோ என மூவரும் பேசிக்கொள்ள அதில் ஆரி, அனிதா ரியோவிடம் பேசும்போதெல்லாம் இடையூறு செய்து பேச ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அனிதா கதறிக் கதறி அழுதார்.

முதல்நாள்ள இருந்தே இப்படி தான்

முதல்நாள்ள இருந்தே இப்படி தான்

அதன் பின் அனிதாவை பேச அனுமதித்த ஆரி இடம் பயங்கரமான சண்டையிட்டவாறு "நீங்கள் என்ன பேசவே விட மாட்டீரிங்க , பேச விட்டா தான் என்னோட தரப்பு வாதத்தை சொல்ல முடியும் இது இன்னைக்கி மட்டும் நடக்குறது இல்ல நான் வீட்டுக்குள்ள வந்த முதல்நாள்ள இருந்தே இப்படிதான் என்ன பேசவே விடாம எல்லாருமே பண்றீங்க ".

சின்ன பொண்ணு கிடையாது

சின்ன பொண்ணு கிடையாது

நான் ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது எனக்கு கல்யாணம் ஆயிருச்சு என்னுடைய புருஷனும் நானும் தான் இப்போ சுயமா எல்லா முடிவுகளையும் எடுக்குறோம், என்னை யாரும் இன்னும் சின்ன பொண்ணா நினைக்காதீங்க" என ஆரியிடம் காட்டமாக பேசியவாறு அனிதா பேசியிருந்தது பலரையும் இதற்கு சிரிப்பதா இல்லை பாராட்டுவதா என குழப்பமடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X