கன்ஃபெஷன் ரூமில் கதறி அழும் அனிதா.. பிரச்சனைன்னா யாருமே எனக்காக நிக்கமாட்றாங்க என புலம்பல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss Tamil • Day 23 | பெரிய போராட்டமா இருக்கு • என்னாச்சு Anitha

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நவராத்திரி கொண்டாட்டங்கள் ஒளிபரப்பப்பட்டன. ஆட்டம் பாட்டம் என ஜாலியாக சென்றது நிகழ்ச்சி.

இருந்தபோதும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அனிதாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சுரேஷ் சக்கவர்த்தி சுமங்கலி என்று சொன்ன ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு அதை தனது பாயிண்டாக பேசினார் அனிதா.

அனிதா பாயிண்ட்

அனிதா பாயிண்ட்

சுமங்கலியாய் இருப்பதால்தான் தன்னை முதல் ஆளாய் செய்ய சொன்னார், இல்லாவிட்டால் செய்ய சொல்லியிருக்க மாட்டாரா என்றும் சுமங்கலிகளை ஒதுக்கக்கூடாது என்றும் கூறினார். இந்த விஷயம் சுரேஷ் சக்கரவர்த்தியை ரொம்பவே பாதித்துவிட்டது.

கன்ஃபெஷன் ரூமில்

கன்ஃபெஷன் ரூமில்

தன்னை கெட்டவராக காட்ட முயற்சிக்கிறார் என வேதனைப்பட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் கன்ஃபெஷன் ரூமில் அனிதா சம்பத் கதறி அழுவதாக உள்ளது.

நான் ஃபன் பண்ற பொண்ணு

நான் ஃபன் பண்ற பொண்ணு

தொடர்ந்து பேசும் அனிதா, கொஞ்சம் லோன்லியா இருக்க மாதிரி ஒரு ஃபீல் இருக்கு. ஏன்னா பொதுவா நான் ஃபன் பண்ற பொண்ணு என்று கூறி முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுகிறார்.

மனசளவுல போராட்டம்

மனசளவுல போராட்டம்

மேலும் பேசும் அனிதா பிரச்சனை வந்தா கூட என் சைடு யாரும் நிக்காத மாதிரி ஒரு கஷ்டம். பிடிச்சவங்க சொன்னதா எடுத்துக்குறதா இல்ல நம்ம நினைச்சத எடுத்துக்குறதான்னு ஒரு போராட்டம் வருது மனசளவுல.

நடிக்காதம்மா..

நடிக்காதம்மா..

ஒரு நெகட்டிவ் ஃபீல் மைண்ட்ல இருந்துக்கிட்டே இருக்கு. என்கிட்டதான் நிறைய மிஸ்டேக் போல அப்படின்னு ஒரு கன்ஃபியூஷன் என அழுகிறார் அனிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் பேசுவதிலேயே தெரிகிறது இது நடிப்பு என்று, எதார்த்தமான வார்த்தைகள் வரவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X