அட.. அனிதா சம்பத் ஹீரோயினா நடிக்கிறாங்கப்பா.. வெளியானது படத்தின் மோஷன் போஸ்டர்!

சென்னை: அனிதா சம்பத் ஹீரோயினாக நடிக்கும் மாயன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் அனிதா சம்பத். இதன் மூலம் உலக தமிழர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

தொடர்ந்து காப்பான், காலா, 2.0, ஆதித்ய வர்மா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

எரிச்சலாக்கும் அனிதா

எரிச்சலாக்கும் அனிதா

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதில் அனிதா சம்பத்தான் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக ரீச் ஆனார். சுரேஷ் சக்கரவர்த்தியை வம்பிழுப்பது, மரியாதை குறைவாக பேசுவது, நக்கலடிப்பது, அவருக்கு எதிராக டீம் சேர்ப்பது என எரிச்சலை கிளப்பி வருகிறார்.

 சுரேஷ் மீது குற்றச்சாட்டு

சுரேஷ் மீது குற்றச்சாட்டு

இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் கழுவி ஊற்றப்பட்டு வருகிறார் அனிதா சம்பத். செய்வதையெல்லாம் செய்துவிட்டு எல்லா தவறும் சுரேஷ் சக்கரவர்த்தி மீதுதான் என்றும் கூறி வருகிறார். கடந்த வாரம் கமல் பேசும் போது கூட சுரேஷ் சக்கரவர்த்தி மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை கூறினார்.

கேவலமான பார்வை

கேவலமான பார்வை

அப்போது கமல் பேசும் போது, அனிதா கொடுத்த ரியாக்ஷன், தீயாய் பரவியது. சுரேஷ் சக்கரவர்த்தியை கேவலமாக ஒரு பார்வை பார்த்ததோடு வாய்க்குள்ளேயே முனுமுனுத்தார். அந்த வீடியோ பெரும் வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அனிதா சம்பத்தை விளாசி வருகின்றனர்.

தப்பேயில்லை

தப்பேயில்லை

ஃபேஷன் ஷோ டாஸ்க், எவிக்ஷன் ஃபிரி பாஸ் டாஸ்க்கின் போதும் கூட சுரேஷ் சக்கரவர்த்தியை கட்டம் கட்டினார். தான் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நடந்து கொண்ட விதத்தில் தவறே இல்லை என்று சட்டம் பேசினார் அனிதா சம்பத்.

மாயன் படத்தில் ஹீரோயின்

மாயன் படத்தில் ஹீரோயின்

இந்நிலையில் அனிதா சம்பத் ஹீரோயினாக நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. மாயன் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அனிதா சம்பத், ஸ்டன்ட் சில்வா ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு மாயன் என பெயரிடப்பட்டுள்ளது.

தீப்பந்தத்துடன் அனிதா

தீப்பந்தத்துடன் அனிதா

சத்யசீலன் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் என கூறப்படும் காட்சிகள் காட்டப்படுவதால் அவற்றை மையப்படுத்தி இந்தப் படம் இருக்கும் என தெரிகிறது. இதில் கையில் தீப்பந்தத்துடன் உள்ளார் அனிதா சம்பத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X