Just In
- just now
பிக் பாஸ் வெற்றி கொண்டாட்டம்.. ரசிகர்களுக்கு அதிரடியாக கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட ஆரி!
- 29 min ago
'பழைய ஃபார்முக்கு வர்றேன்..' தீவிர பயிற்சியில் நடிகை தமன்னா.. வேகமாகப் பரவும் ஒர்க் அவுட் வீடியோ!
- 1 hr ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 2 hrs ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- News
ஓஹோ.. இது வேறயா.. "அவங்களும்" நூல் விடறாங்களாமே.. பிரேமலதாவும் கெத்து காட்டுறாரே.. அப்படீன்னா!
- Automobiles
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் வாகன காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும்!
- Sports
இதுவரைக்கும் இல்லாதவகையில அதிகமாக பார்க்கப்பட்ட போட்டி... 54% அதிக பார்வையாளர்கள்
- Education
ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!
- Lifestyle
உங்க ராசியின் சின்னத்தோட உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா? அது உங்கள பத்தி என்ன சொல்லுது தெரியுமா?
- Finance
மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பண்ணது தப்பு தான்.. ஆனால், ஸாரி கேட்க மாட்டேன்.. அடாவடி பண்ண அனிதா.. கடுப்பான பாலா!
சென்னை: சமைக்கவே தெரியாமல் தனியாளா 12 பேருக்கு சமைச்சேன் என அனிதா சம்பத் போட்ட சீனை யாராலும் மறக்க முடியாது.
மீண்டும் அனிதா சம்பத்துக்கு சமைக்க தெரியாது என்பதை ஆரி ஆணித்தரமாக நிரூபித்த நிலையில், இன்னொரு சண்டை வெடித்துள்ளது.
கேப்டனாக இருந்த பாலா, அந்த பிரச்சனைக்குள் தலையிட அவரும் அனிதாவால் ரொம்பவே சூடாகி போய்விட்டார்.
புல் தடுக்கி பயில்வான்.. ஷிவானியை பிளேம் பண்ண பாலா.. செம சண்டை.. ஷிவானி இந்த வாரமும் சேவ் தான்!

பருப்பு பிரச்சனை
ஏற்கனவே பாசிப் பருப்பு போட்டு சாம்பார் வைக்க முடியாது என்கிற பிரச்சனையை அனிதா சம்பத் கிளப்பிய நிலையில், இப்போ கடலைப் பருப்பை சாம்பாருக்காக ஊற வைத்த பிரச்சனை அவர் தலை மீது வந்து விடிந்துள்ளது. வேஸ்ட்டானதை கொட்டவில்லை என ஆரி, அனிதா மீது பாலாவிடம் புகாரை சொல்லிவிட்டு சைலன்ட் ஆகிவிட்டார்.

பாலாவின் விசாரணை
இந்த வாரம் அர்ச்சனாவின் தயவால் கிடைத்த கேப்டன் பதவியில் முதல் பஞ்சாயத்து கிடைத்துள்ளது. ஆரி அனிதா மீது புகார் சொல்லி இருக்கிறார். சூப்பராக இருக்கே, ரெண்டு பேரில் ஒருவர் சிக்குவார்கள், இரண்டு பேரையும் காலி பண்ணலாம் என சாதாரண கடலைப் பருப்பு மேட்டரை விசாரணை என்கிற பேரில் கடையோ கடைன்னு கடைஞ்சு அனிதாவை டார்ச்சர் செய்து விட்டார் பாலா.

பண்ணது தப்பு தான்
கடலை பருப்பு விவகாரத்தை பாலா ஏன் இவ்வளவு பெரிதாக ஊதுகிறார் என கடுப்பான அனிதா சம்பத், அதை வைத்து இன்னும் எந்த அளவுக்கு பிரச்சனையை ஊதிப் பெரிதாக்க முடியும் என ஆழம் பார்த்தார். கடைசியில் தான் பண்ணது தப்பு தான் என ஹவுஸ்மேட்கள் முன்னிலையில் ஒப்புக் கொண்டார்.

மன்னிப்பு கேட்க மாட்டேன்.
நான் பண்ணது தப்பு தான் என்றாலும், என்னிடம் கேட்ட முறை ரொம்பவே தப்பா இருந்த காரணத்தினால், இந்த விஷயத்தில் என்னால் மன்னிப்பு ஏதும் கேட்க முடியாது என விடாப்பிடியாக இருந்து பாலாவை நல்லாவே வெறுப்பேற்றினார் அனிதா சம்பத். இப்படி அடாவடி பண்ணுகிறாரே அனிதா என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் அனிதாவை கிண்டல் பண்ணி வருகின்றனர்.

12 பேருக்கு எப்படி சமைச்சாங்க?
சாம்பாருக்கு என்ன பருப்பு போடணும்னு கூடத் தெரியாத அனிதா சம்பத், 12 பேருக்கு தனியா ஆளா இருந்து சமைச்சேன் என சொல்வது ரொம்ப காமெடியாக இருக்கு என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்லா ஏமாத்துறாங்க என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். அர்ச்சனா போன பிறகு சமையல் டீம் ரொம்பவே கஷ்டப்படுகிறது என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.