அழுமூஞ்சி அனிதா.. கல்நெஞ்சக்காரர் சுரேஷ்.. உச்சகட்ட சண்டையால் வெறுப்பான ரசிகர்கள்!

சென்னை : பிக் பாஸ் பார்க்கும் பலரும் வெறுப்படையும் வகையில் அனிதா மற்றும் சுரேஷ் சண்டை இன்று வரை ஜவ்வாக இழுத்து வருகிறது.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 | Day 23 Highlights

பிக்பாஸ் தொடங்கிய நாள் முதலே இருவரும் முட்டிக்கொள்ள அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சண்டை பின் சமாதானமாகி இப்பொழுது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் அனிதா பிக் பாஸ் வீட்டில் எங்கெல்லாம் இடமுள்ளதோ எல்லா இடத்திலும் அழுவது பார்க்கும் அனைவரையும் வெறுப்படையச் செய்தது.

ஓயாமல் நீண்டு கொண்டே

ஓயாமல் நீண்டு கொண்டே

உலகப் போரே முடிந்துவிடும் போல இந்த அனிதா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் கொலா சண்டை போர் இன்று வரை ஓயாமல் நீண்டு கொண்டே போகிறது.

புலம்ப வைத்துள்ளது

புலம்ப வைத்துள்ளது

எச்சில் தெறிக்கும் விவாதத்தில் தொடங்கிய இவர்களது சண்டை இப்பொழுது பல்வேறு பாகங்களாக விஸ்வரூபம் எடுத்து இருவரையும் சர்ச்சைக்கு உள்ளாக்கி வருவதோடு ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் புலம்ப வைத்துள்ளது.

சுமங்கலிங்க பூஜைக்கு வாங்க

சுமங்கலிங்க பூஜைக்கு வாங்க

சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுது ஓவர் ரியாக்ட் செய்து வந்த அனிதா நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் சுமங்கலிங்க பூஜைக்கு வாங்க என சுரேஷ் சக்கரவர்த்தி கூறியதை வழிமொழிந்து தனது சொந்த வாழ்க்கையில் நடந்ததை ஒப்பிட்டு பேசி மீண்டும் சண்டையை தெருவுக்கு இழுத்துக் கொண்டார்.

கடைசிவரை பிடிவாதமாக

கடைசிவரை பிடிவாதமாக

தன்னை குறிப்பிட்டு அனிதா கூறியதால் தான் மிகவும் மன வருத்தத்தில் இருப்பதாகவும் இனிமேல் அனிதாவிடம் எந்த ஒரு சமரசத்திலும் ஈடுபடப் போவதில்லை என சுரேஷ் உறுதியாக இருக்கும் பட்சத்தில் ஹவுஸ் மேட்ஸ் பலரும் சுரேஷ் சக்கரவர்த்தியை சமாதானப்படுத்த முயற்சிக்க அவர் கடைசிவரை பிடிவாதமாக இருந்தார்.

கல்நெஞ்சக்கார சுரேஷ்

கல்நெஞ்சக்கார சுரேஷ்

அனிதா தான் பேசியதில் எந்த ஒரு தவறும் இல்லாத போதும், அதனால் சக்கரவர்த்தி மனமுடைந்து உள்ளதைக் கண்டு மன்னிப்பு கேட்க பல வழிகளில் முயன்றும் மூஞ்சி கொடுத்துக் கூட பேச விருப்பம் இல்லாத சுரேஷ் சக்கரவர்த்தியின் கல்நெஞ்சக்கார பிடிவாதத்தை பார்த்து மனம் நொந்து போய் கேவிக் கேவி அழுதார்.

குழந்தைத்தனமான சண்டை

குழந்தைத்தனமான சண்டை

இவ்வாறு சுரேஷ் மற்றும் அனிதாவின் சண்டை பல்வேறு ரூபங்களில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்க பிக் பாஸை பார்க்கும் அனைவரையும் இவர்களது குழந்தைத்தனமான அர்த்தமற்ற சண்டைகள் வெறுப்படைய செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X