பாலாஜி முருகதாஸ் உடன் ஜோடியாக நடனம் போட்டு என்ட்ரி கொடுத்த அனிதா சம்பத்.. பால் கொடுத்தனுப்பிய கமல்!
சென்னை: சன் டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார்.
இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 8வது போட்டியாளராக அதிரடியாக களமிறங்கி உள்ளர்.
ஸ்பேஸ் இல்லை என கவலைப்பட தேவையில்லை, தற்போது 24 மணி நேர ஸ்பேஸ் இருக்கு என அனிதாவை ஆரம்பத்திலேயே கமல் கலாய்த்து விட்டார்.

பாலாஜியுடன் என்ட்ரி
பாலாஜி முருகதாஸை கமல் அறிமுகப்படுத்தி விட்டு அவருடைய டான்ஸ் பர்ஃபார்மன்ஸ் நடந்து கொண்டிருக்க கடைசி நேரத்தில் திடீரென எந்தவொரு அறிவிப்பும் இன்றி பாலாஜி முருகதாஸ் உடன் நடனமாடியபடியே அசத்தல் என்ட்ரி கொடுத்தார் அனிதா சம்பத். நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் எனிமி படத்தின் டும் டும் பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.

8வது போட்டியாளர்
பிக் பாஸ் அல்டிமேட் கிராண்ட் லாஞ்ச் மிகவும் பிரம்மாண்டமாகவும் கலர்ஃபுல்லாகவும் ஆரம்பித்தன. வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி, தாமரை செல்வி, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸை தொடர்ந்து 8வது போட்டியாளராக அழகாக பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டார் அனிதா சம்பத்.

பால் கொடுத்த கமல்
கோபப்படாமல் அமைதியாக இந்த சீசனில் தெளிவாக கேம் விளையாட இந்த பாலை எடுத்துக் கொள்கிறேன் சார் என கமல் கொடுத்த பாலுடன் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் அனிதா சம்பத். தான் கலந்து கொண்ட 4வது சீசன் போட்டியாளர்கள் ரொம்ப டஃப் ஆக இருந்தனர் என்றும் தனது குமுறலை கூறிய அனிதா இந்த முறை வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் சென்றுள்ளார்.

4வது சீசனில் இருந்து
பிக் பாஸ் சீசன் 4ல் இருந்து பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அனிதா சம்பத் என மூன்று பேர் கலந்து கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் சுரேஷ் தாத்தாவுடன் ஜோடி போட்டு ஆடிய அனிதா சம்பத் பின்னர் அவருடன் கருத்து மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சீசன் போட்டியாளர்களாக நட்பாக போகின்றனரா? அல்லது எப்படி குரூபிசம் ஆரம்பிக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











