போன வாரம் ஜீ தமிழ்.. இந்த வாரம் சன் டிவி.. நல்லா பண்றீங்க விஜய் டிவி.. அனிதா சம்பத் தான் அவுட்டாம்!
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அனிதா சம்பத் தான் என்கிற தகவல் கசிந்துள்ளது.
Recommended Video
ஆரி மற்றும் பாலாவுடன் அனிதா சம்பத் இந்த வார ஆரம்பத்தில் வெடித்து சிதறியது தான் அவருக்கு ஓட்டுக்கள் குறைய காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் ஜீ தமிழ் அர்ச்சனாவை வெளியே அனுப்பிய நிலையில், இந்த வாரம் சன் நியூஸ் அனிதாவை வெளியேற்றியுள்ளனர்.

அன்பு கேங் டார்கெட்
ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா என அன்பு கேங்கில் இருந்து மூவரை வெளியேற்றிய அனிதாவை அன்பு கேங் டார்கெட் செய்து நாமினேஷனுக்கு கொண்டு வந்தது. அனிதா மற்றும் ஆரி இருவரில் ஒருவரை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட வேண்டும் என்கிற ரீதியில் செயல்பட்டு, பாயாசம் கொடுக்கும் அனிதாவுக்கே அன்பு டீம் பாயாசம் போட்டு விட்டனர்.

பிரபாவ பத்தி பேசாதீங்க ஆரி
இந்த வார தொடக்கத்தில் ஆரி அர்ஜுனா, அனிதா சம்பத்தின் கணவர் பற்றி பேச வாய் திறக்கும் போது, தனது குடும்பத்தையும் தனது கணவர் பிரபா பற்றியும் பேசாதீங்க ஆரி என ரொம்பவே அனிதா கோபப்பட்டதே அவருக்கு இந்த வாரம் ஓட்டுக்கள் குறைய காரணம் என தெரிகிறது. அர்ச்சனா பிரபா பாவம் என பேசும் போது அமைதியாக இருந்த அனிதா, ஆரி என்ன சொல்ல வருகிறார் என்றே கேட்காத முன்பே அப்படி கோபப்பட்டதை தவறு என்று பலரும் கண்டித்து இருந்தனர்.

பாலாவுடன் பகை
சமூக வலைதளத்தில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் ஆரி மற்றும் பாலாவை இந்த வாரம் அனிதா சம்பத் சம அளவில் முறைத்து சண்டை போட்டது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக இருந்த பாலா ஷிவானிக்கு மட்டுமே சப்போர்ட் செய்கிறார் என்று பேசியது, பாலா அனிதாவின் தவறை சுட்டிக் காட்டிய நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கோபப்பட்டு இருந்தார்.

டேஞ்சர் ஸோன்
இந்த வாரம் எவிக்ஷன் நாமினேஷனில் ஆரி, அனிதா, கேபி, ஷிவானி மற்றும் ஆஜீத் உள்ளிட்டோர் இருந்தனர். இதில் டேஞ்சர் ஸோனில் ஆரம்பத்தில் இருந்தே அனிதா, ஆஜீத், ஷிவானி உள்ளிட்டோர் குறைவான வாக்குகளை பெற்று இருந்தனர். இந்த முறையும் ஆஜீத்தா அனிதாவா என்கிற இறுதி நொடிகள் ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் இருக்கும் என தெரிகிறது.

அனிதா அவுட்
இந்நிலையில், தற்போது அனிதா சம்பத் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. சோலோ பிளேயராக பிக் பாஸ் வீட்டில் 83 நாட்களுக்கு மேல் இருந்த அனிதா சம்பத் இந்த வாரம் வெளியேற்றப்படும் நிலையில், ரசிகர்கள் இது சரியான முடிவு என்றும், அனிதாவுக்கு அளிக்கப்பட்ட அநீதி என்றும் இரு வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

போன வாரம் ஜீ தமிழ்
போன வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜீ தமிழ் தொகுப்பாளினி அர்ச்சனா வெளியேறிய நிலையில், இந்த வாரம் சன் நியூஸ் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் இதுவும் விஜய் டிவியின் மாஸ்டர் பிளான் தான் என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

எல்லாமே விஜய் டிவி
அனிதா சம்பத் வெளியேறும் பட்சத்தில், ஆரியை தவிர எல்லாருமே விஜய் டிவி புராடக்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் மீனாட்சி ரியோ, குக் வித் கோமாளி ரம்யா, பகல் நிலவு ஷிவானி, சூப்பர் சிங்கர் ஆஜித், ஜோடி நம்பர் ஒன் கேபி, அழகிய தமிழ் மகன் சோமசேகர் மற்றும் கனெக்ஷன் பாலாஜி முருகதாஸ் என டோட்டலாவே விஜய் டிவி கனெக்ஷன் இருப்பது ரொம்பவே அன்ஃபேர் தான்.


Click it and Unblock the Notifications











