இவ்ளோ ஸ்பேஸ் கிடைத்தும் ஸ்கோர் பண்ணலையே.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வெற்றிகரமாக 7வது வாரத்தை நிறைவு செய்கிறது.
Recommended Video
கமல்ஹாசன் போன பின்பு நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு சினேகன் வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.

லேட்டாக ஆரம்பிக்கும் ஷூட்டிங்
நடிகர் சிம்பு படப்பிடிக்கு கால தாமதமாக வருகிறார் என முன்னதாக ஏகப்பட்ட புகார்கள் கிளம்பின. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கமல் தொகுத்து வழங்கும் போது காலையிலேயே தொடங்கி வந்த நிலையில், தற்போது பிற்பகலில் தான் ஷூட்டிங்கே ஆரம்பிக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன காரணம்
நடிகர் சிம்புவின் ஐடியா தான் இது என்றும், காலையிலேயே படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட உடனே யார் எவிக்ட் ஆனார் என்கிற ரகசியம் கசிந்து விடுவதால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைவதாகவும், லேட்டாக படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டால் யார் வெளியேறினார் என்பது நள்ளிரவில் தான் தெரியும், அடுத்த நாள் ஷோ ஒளிபரப்பாகி விடும் என்பதால் இப்படி பிக் பாஸ் ஷூட்டிங்கை தாமதமாக தொடங்க சொல்லி உள்ளார் என கூறுகின்றனர்.

இந்த வார நாமினேஷன்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது வாரத்தில் நிரூப், தாமரை, ஜூலி, சதீஷ், சுருதி மற்றும் அனிதா சம்பத் உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். பாலாஜி முருகதாஸ், அபிராமி, ரம்யா பாண்டியன், சுரேஷ் தாத்தா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் ஆகவில்லை.

டேஞ்சர் ஜோனில்
குறைவான வாக்குகளை அள்ளி டேஞ்சர் ஜோனில் சுருதி, அனிதா சம்பத் மற்றும் சதீஷ் உள்ளிட்ட மூவர் கடைசி இடத்தில் போராடி வந்த நிலையில், தற்போது இந்த மூவரில் யார் வெளியேறி உள்ளார் என்கிற தகவல் வழக்கம் போல ஷோவின் படப்பிடிப்பு முடிந்ததும் கசிந்து விட்டது.

அனிதா அவுட்
பிக் பாஸ் சீசன் 4ல் தனக்கு சரியான ஸ்பேஸ் கிடைக்கவில்லை என்றும், கிடைத்திருந்தால் டைட்டில் வின்னராகவே ஆகியிருப்பேன் என்கிற ரேஞ்சுக்கு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வரும் போது பேசிய அனிதா சம்பத் 7 வாரங்கள் சிறப்பான விளையாட்டை கொடுத்து தான் வெளியேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுதான் காரணமா
அன் அஃபிஷியல் கருத்துக் கணிப்பின் படி குறைவான ஓட்டுக்களுடன் இந்த வாரமும் கடைசி இடத்தில் சுருதி தான் இருந்து வந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அனிதா சம்பத் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு எவிக்ட் செய்யப்பட காரணமே நிரூப்புடன் இணைந்து கொண்டு ஜூலிக்கு எதிராக அவர் பேசியது தான் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபர்ஸ்ட் சேவ் யார்
இந்த வாரம் அதிக ஓட்டுக்களுடன் நிரூப் முதலில் சேவ் ஆவாரா? அல்லது தாமரை சேவ் ஆவாரா? என எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு டஃப் ஆன டாஸ்க்குகளை விளையாடிய ஜூலிக்குத் தான் ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருப்பதால் அவர் தான் முதலில் சேவ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஷோவும் ரசிகர்களை கவரும் வகையில் சிம்புவின் அட்டகாச ஹோஸ்ட்டிங்குடன் களைகட்டும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











