'10ஆம் கிளாஸ் பையனை போல்' அனிதா அப்பா செய்த சில்றத்தனமான வேலை.. கையும் களவுமாய் பிடித்த நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸில் பங்கேற்றுள்ள மகளுக்காக வேண்டி அனிதாவின் அப்பாவான சம்பத் செய்த சில்றத்தனமான வேலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சன்டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பொய் சொல்வதிலும் எரிச்சல் படுத்துவதிலும் ஜூலியை மிஞ்சிவிட்டார் அனிதா சம்பத். குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தியை கண்டாலே அனிதாவுக்கு பிடிக்கவில்லை.

ரொம்ப முக்கியம்

ரொம்ப முக்கியம்

அவரை பார்த்து நக்கலடிப்பது, கேலியாய் பேசுவது, மரியாதை குறைவா பேசுவது என தனது உண்மை முகத்தை காட்டி வருகிறார். ஒரு நேரம் என் பெயர் எனக்கு ரொம்ப முக்கியம் என்று பேசும் அனிதா சம்பத் நான் கெஞ்சும் கேரக்டர் இல்லை எனக்கு நல்ல பெயரே வேண்டாம் என்கிறார்.

ஜூலியே பரவாயில்லை

ஜூலியே பரவாயில்லை

நேற்று கமலிடம் சுரேஷ் சக்கரவர்த்தி பேசும் போது அவரை பார்த்து கேவலமாய் ஒரு லுக்கு விட்டு வாயில் முனுமுனுத்தார். அவரது அந்த மோசமான எரிச்சல் படுத்தும் ரியாக்ஷன் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அனிதா சம்பத்துக்கு ஜூலியே பரவாயில்லை என பெருமூச்சு விட்டுள்ளனர் நெட்டிசன்ஸ்.

பொய் சொன்ன அனிதா

பொய் சொன்ன அனிதா

பிக்பாஸில் பங்கேற்று தனது மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார் அனிதா சம்பத். ஏற்கனவே சுரேஷ் பேசும் போது நடுவிரலை காண்பித்தார் என சர்ச்சையானது. நேற்று கமலிடம் பேசும் போதும் சுரேஷ் பற்றி பொய்யைதான் சொன்னார் அனிதா சம்பத்.

சில்றத்தனமான வேலை

சில்றத்தனமான வேலை

இதனாலேயே அவரை ரசிர்கள் கழுவி ஊற்றி வரும் நிலையில் அவரது அப்பாவும் சில்றத்தனமான ஒரு வேலையை செய்து சமூக வலைதளங்களில் சின்னாபின்னமாகி வருகிறார். அதாவது அனிதாவுக்கு ஆதரவாகவும், நல்லப் பெயரை வாங்கிக் கொடுக்கும் எண்ணத்திலும் பத்தாம் வகுப்பு மாணவனை போல் ஏமாற்று வேலை செய்துள்ளார்.

பத்தாம் வகுப்பு பையன் போல

பத்தாம் வகுப்பு பையன் போல

அதாவது அனிதா பிக்பாஸ் வீட்டில் நடந்து கொள்ளும் முறை குறித்த யூட்யூப் ஒன்றின் விமர்சனத்திற்கு, தான் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் என கூறி கமெண்ட் போட்டுள்ளார். அதில் அவர் தங்கிலீஷில் பதிவிட்டிருப்பதாவது, ஹலோ நாக்குல நரம்பு இல்லாம பேசாதீங்க..

ஃபீஸ் கட்ட காசு இல்ல

ஃபீஸ் கட்ட காசு இல்ல

அனிதா சம்பத் எனக்கு தெரிஞ்சவங்க.. நான் 10வது பீஸ் கட்ட காசு இல்ல. 6 மாத பீஸ கட்டினாதான் எக்ஸாம் எழுத முடியும்னு ஸ்கூல்ல சொன்னாங்க.. அப்போ அனிதா சம்பத் அவங்கதான் எனக்கு ஃபீஸ் கட்டினாங்க.. அப்புறம் நான் எக்ஸாம் எழுதினேன்.

முத்திரை குத்தாதீங்க

முத்திரை குத்தாதீங்க

ஒரு வார்த்தை தெரியாம பேசிட்டாங்கன்னு அவங்கள கெட்டவங்கன்னு முத்திரை குத்தாதீங்க பீப்பிள்ஸ்.. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பத் ஜி என்ற பெயரில் உள்ள அந்த நபர் அனிதாவின் அப்பாதான் என்பதை நெட்டிசன்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஃபேமிலி போட்டோ

ஃபேமிலி போட்டோ

யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பதிவிட்ட கமெண்ட்டில் தனது ஐடி பெயரையும் போட்டோவையும் மாற்றாமல் இப்படி ஒரு சீப்பான வேலையை செய்துள்ளார் அனிதாவின் அப்பா. இதனை பார்த்த நெட்டிசன்கள், அந்த கமெண்ட் அவருடைய போட்டோ மற்றும் அனிதா சம்பத் ஃபேமிலி போட்டோ என போட்டு கழுவி ஊற்றியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X