மைக் மாட்டு அனிதா.. இது போதும் சண்டை போட.. சனம் ஷெட்டியை முறைத்துக் கொண்டு போன சிடுமூஞ்சி!

சென்னை: அனிதா தனது கணவருடன் இப்படித்தான் பேசி சண்டை போடுவார் என சமீபத்தில் வைரலான மீம் போல, நேற்றைய எபிசோடிலும் ஒரு சூப்பரான சம்பவம் நடந்தது.

பாலாஜி முருகதாஸை ஜெயிலுக்குள் தள்ளியதும், நக்கலடிக்கிறாரா? உண்மையா ஃபீல் பண்றாரேன்னு தெரியாத அளவுக்கு சனம் ஷெட்டி, ஜெயிலுக்கு உள்ளயே நின்று கொண்டிருந்தார்.

பின்னர், சம்யுக்தா போதும்மா வெளியே வா என்ற பிறகே வெளியே வந்தார்.

சுரேஷ் தாத்தா இருந்திருக்கணும்

சுரேஷ் தாத்தா இருந்திருக்கணும்

பிக் பாஸ் சொன்ன அடுத்த செகண்ட் வேக வேகமா ஓடி ஜெயில்ல பாலாவையும், சுச்சியையும் அடுத்த செகண்டே தள்ளி இருப்பார். எப்படியோ வீட்டில் இருந்தபடியே அந்த இரண்டு பேரும் கண்ணாடி சிறைக்குள் சென்றதை ஹேப்பியா பார்த்து ரசித்திருப்பார். மற்ற எல்லா போட்டியாளர்களும் பாலாவுக்கு ஏன் தான் அப்படி பயப்படுகிறார்களோ தெரியவில்லை.

வெறுப்பேற்றிய சனம்

வெறுப்பேற்றிய சனம்

யூ கோ மேன் ஜெயிலுக்கு நான் ஏன் போகணும் என சனம் ஷெட்டியிடம் சண்டை போட்ட பாலாவுக்கு செருப்படி கொடுக்கும் விதமாக ஜெயிலில் புடிச்சு போட்டதை நினைத்து நினைத்து பாலாவை வெறுப்பேற்றவே அவர் கூடவே ஜெயிலுக்கு வந்து சனம் ஷெட்டி பேசினார் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஸ்பேஸ் தேடிய அனிதா

ஸ்பேஸ் தேடிய அனிதா

என்னடா இன்னைக்கு ஃபுல்லா பாலா மாமா புராணம் தானா? கமல் சார் வரும் போது, நம்மள கண்டுக்கவே மாட்டாரா என எண்ணிய அனிதா சம்பத், சைடு கேப்பில் ஒரு சண்டையை சனம் ஷெட்டியுடன் போட்டு விட்டு சென்றுள்ளார். பாவம் இப்படியான கேரக்டர் கூடலாம் மனுஷன் எப்படி வாழ்றானோ என அனிதாவின் கணவரை பார்த்துத் தான் பெரும்பாலான நெட்டிசன்கள் பரிதாபப்பட்டனர்.

மைக் மாட்டு அனிதா

மைக் மாட்டு அனிதா

நல்லா மேக்கப் போட்டுக்கிட்டு டிரெஸ் மாட்டிக்கிட்டு வரத் தெரியுது. ஆனால், மைக்கை மாட்டாமல் பாலா மாதிரியே தடித் தனமாக வந்த அனிதாவை பார்த்து மைக் மாட்டு அனிதா என கொஞ்சம் அதட்டலாக சொல்லி விட்டார் சனம் ஷெட்டி. உடனே சண்டை போட சான்ஸ் கிடைச்சிடுச்சுன்னு அனிதா தனது கச்சேரியை ஆரம்பித்து விட்டார்.

Recommended Video

பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
சமாதானப்படுத்திய சனம்

சமாதானப்படுத்திய சனம்

சுச்சி பிக் பாஸுக்காக கேட்ட அந்த பிரண்ட்ஷிப் பேண்டை எடுத்துக் கொடுத்து விட்டு, வேக வேகமாக, நான் கோபப்பட்டுருக்கேன் பாரு சனம் என்பது போல முறைத்துக் கொண்டு கிளம்பினார். பின்னர், பாத்ரூம் ஏரியாவில், சனம் ஷெட்டியை கட்டிப் பிடித்து மன்னிப்பு கேட்டு, யம்மா தாயே பிரச்சனையை பெருசாக்கிடாத என ஆஃப் பண்ணிட்டார் அனிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X