செருப்பால் அடித்துவிட்டு மன்னிப்பு கேட்பீயா? க்ளோஸ் ஃபிரண்ட் சோமுவையும் வச்சு வெளுத்த அனிதா சம்பத்!

சென்னை: நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதாவிடம் சிக்கி வறுபட்டவர் சோம சேகர். மன்னிப்பு கேட்ட பிறகும் விடாமல் அவரை வச்சு செய்தார்.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆட்டம் கொண்டாட்டம் டாஸ்க்கில் யார் சிறப்பாக செய்தார் என கேட்டார் பிக்பாஸ்.

அதற்கான தேர்வு ஓட்டுகளின் அடிப்படையில் நடைபெற்றது. அப்போது சோமசேகருக்கு அனிதா ஓட்டுப்போடவில்லை என தெரிகிறது.

ஓட்டு போட முடியாது

ஓட்டு போட முடியாது

அதற்காக சாதரணமாக பார்த்த சோம சேகரை ஏன் முறைக்கிறாய்? நான் மைண்டில் ஃபிக்ஸ் செய்தவருக்கு தான் ஒட்டுப் போட முடியும் ஒவ்வொருத்தருக்கும் என்னால் ஓட்டு போட முடியாது என படு ஆக்ரோஷமாக பேசினார்.

நான் கேட்டேனா?

நான் கேட்டேனா?

மேலும் ஃபிரண்ட்ஸ் என்பதால் எல்லாவற்றுக்கும் கையை தூக்க முடியாது என்றும் மூஞ்சில் அடித்தது போல் பேசினார் அனிதா. ஓட்டுப்போடவில்லை என்பதற்காக என்னிடம் கோபித்துக் கொண்டு பேசாமல் இருக்கிறார் என்றார். அதற்கு நான் உன்னிடம் ஒட்டுப்போட சொல்லி கேட்டேனா என்றார் சோம சேகர்.

மாற்றி மாற்றி பேசுகிறாய்

மாற்றி மாற்றி பேசுகிறாய்

ஆமாம் நான், உனக்காக கையை தூக்கவில்லை என்பதற்காக என்னை முறைத்தாய், அதற்காகதான் பேசாமல் இருக்கிறாய் என்றார் அனிதா சம்பத். நான் முறைக்கவில்லை நீ மாற்றி மாற்றி பேசுகிறாய் என்றார் சோம சேகர்.

என்னிடம் பயன்படுத்தாதே

என்னிடம் பயன்படுத்தாதே

இதனால் ஆத்திரப்பட்ட அனிதா சம்பத் என்ன மாத்தி மாத்தி பேசுறாங்க? என மீண்டும் சண்டையை ஆரம்பித்தார். இந்த வார்த்தையை இனிமேல் என்னிடம் பயன்படுத்தாதே என்றும் சோம சேகரிடம் கூறி எச்சரித்தார்.

மக்களிடம் ரிஜிஸ்டராகும்

மக்களிடம் ரிஜிஸ்டராகும்

பின்னர் இருவரும் சமாதானம் பேச கார்டன் ஏரியாவுக்கு சென்றனர். அப்போது மாற்றி மாற்றி பேசுகிறேன் என ஏன் சொன்னாய்? இதேல்லாம் மக்கள் மத்தியில் அப்படியே ரிஜிஸ்டர் ஆகும். இனிமேல் அப்படி சொல்லாதே.

செருப்பால் அடித்துவிட்டு மன்னிப்பா

செருப்பால் அடித்துவிட்டு மன்னிப்பா

சுரேஷ் சாரிடம் எனக்கு பிரச்சனை வந்ததற்கு காரணமே அதுதான். அவரும் இப்படிதான் என்னை மாற்றி மாற்றி பேசுகிறேன் என்றார் என கண்ணீர் விட்டப்படியே கூறினார். சோமு எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டும் சமாதானம் ஆகாத அனிதா சம்பத் செருப்பால் அடித்து விட்டு, அதை துடைத்து விட்டு மன்னிப்பு கேட்பாயா?

கடைசியில் அழுகை

கடைசியில் அழுகை

நீ என்னை பேசியது செருப்பால் அடித்தது போல் இருந்தது என கூறி அந்தப் பிரச்சனையை ரொம்பவே பெரிதாக்கினார் அனிதா சம்பத். பின்னர் கர்ச்சிஃபை கொடுத்து அழாதே என்றார் சோமு. அதற்கு நீ சளியெல்லாம் துடைத்திருப்பாய் எனக்கு வேண்டாம் என்றார் அனிதா.

Recommended Video

Bigg Boss 4 Tamil | Day 11 | 15th October Episode - Filmibeat Tamil
மக்கள் கவனிப்பார்கள்

மக்கள் கவனிப்பார்கள்

புது கர்ச்சீப்தான் என்று கூறியும் ஃபிரண்ட்ஷிப் முறிந்து விடும் வேண்டாம் என அவாய்ட் செய்தார் அனிதா. ஃபிரண்ட்டா வேண்டாம் தங்கச்சியா வாங்கிக்கோ.. நீ யூஸ் பண்ண வேண்டாம் ஆனால் வாங்கிக்கோ என்றார் சோமு. இப்படியாக என்ன பேசினாலும் செய்தாலும் அதை மக்கள் கவனிப்பார்கள் என்பதில் அதிகவனமாக உள்ளார் அனிதா சம்பத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X