பப்பட் ரோபோ.. பாஸி ரோபோ.. டைட்டில் வின்னர் ரோபோ.. ரோபோக்களுக்கு பெயர் வைத்து காண்டாக்கிய அனிதா!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ரோபோ vs மனிதர்கள் டாஸ்க் ஆரம்பித்துள்ளது.

ரோபோக்கள் தலைவியாக அர்ச்சனாவும், மனிதர்களின் தலைவனாக பாலாவையும் பிக் பாஸ் நியமித்துள்ளார்.

அர்ச்சனாவுக்கு பாஸி ரோபோ, ரம்யாவுக்கு டைட்டில் வின்னர் ரோபோ, ஜித்தன் ரமேஷுக்கு ராஜா வீட்டு கன்னுக்குட்டி ரோபோ என ஒவ்வொரு ரோபோவுக்கும் அந்த போட்டியாளர்களை சீண்டும் வகையில் அனிதா சம்பத் பெயர் வைத்தது தரமான சம்பவம்.பாட்டு

பூம் பூம் ரோபோ

பூம் பூம் ரோபோ

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் படத்தில் இடம்பெற்ற பூம் பூம் ரோபோ பாடலை காலையில் எழுந்தவுடன் போட வழக்கம் போல ஷிவானி, ரம்யா பாண்டியன், அனிதா, கேபி எல்லாம் கவர்ச்சியா நடனமாட, மற்றவர்களும் தங்களுக்கு தெரிந்த ஸ்டெப்ஸ் போட்டனர். ரோபோ டாஸ்க்கை முன்னிட்டு இந்த பாட்டை போட்டுருக்காங்களாம்!

ரோபோ vs மனிதர்கள்

ரோபோ vs மனிதர்கள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் இந்த வாரம் ரோபோக்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே பிரச்சனையை தூண்டிவிட்டு சண்டைகளை வெடிக்க வைக்க பிக் பாஸ் நம்பியார் பிளான் போட்டு விட்டார். அர்ச்சனாவை ரோபோ தலைவராகவும், பாலாவை மனிதர்கள் தலைவராகவும் நியமித்தார்.

பட்டப்பெயர் வைத்த அனிதா

பட்டப்பெயர் வைத்த அனிதா

ரோபோ டீமை அர்ச்சனாவும், மனிதர்கள் டீமை பாலாவும் பிரித்தனர். பின்னர், ரோபோக்கள் போன்று டிரெஸ் அணிந்து கொண்டு அர்ச்சனா டீம் வரிசையாக வந்தனர். அவர்களை பார்த்து, ஆரம்பத்திலேயே காண்டாக்க வேண்டும் என பிளான் போட்ட அனிதா மற்றும் ரியோ, ரோபோக்களுக்கு பெயர் வைக்க முடிவு செய்தனர். ஒவ்வொருத்தரையும் பர்சனலா அட்டாக் பண்ற மாதிரி அனிதா பெயர் வைத்தார்.

அர்ச்சனாவை ஆட்டிப் பார்க்க

அர்ச்சனாவை ஆட்டிப் பார்க்க

ரோபோக்களின் தலைவியான அர்ச்சனாவை ஆட்டிப் பார்க்க அவருக்கு பிடிக்காத பாஸி என்கிற பெயரை அனிதா வைத்தார். பாஸின்னு சொன்னா ஃபீல் பண்ணாதீங்க, நீங்க ஒரு குயின் என சனம் ஷெட்டி, ஞாயிற்றுக்கிழமை கொடுத்த பூஸ்ட் காரணமாக அர்ச்சனா அதனை பெரிதாக கண்டுக்கவில்லை.

பப்பட் ரோபோ

பப்பட் ரோபோ

அர்ச்சனாவுக்கு எப்படி பாஸி என்றால் பிடிக்காதோ அதே போல பப்பட் என்கிற வார்த்தை பிடிக்காத சோமசேகருக்கு பப்பட் ரோபோ என அனிதா சம்பத் பெயர் வைத்து வெறுப்பேற்றினார். ரோபோக்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களை வைத்தே அவர்களை அழைப்பதும் கலாய்ப்பதும் என அட்டகாசம் செய்தனர்.

அனிதா அட்டகாசம்

அனிதா அட்டகாசம்

அதே போல ஜித்தன் ரமேஷுக்கு ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி ரோபோ என்று பெயர் வைத்தார் அனிதா, ரம்யா பாண்டியனுக்கு டைட்டில் வின்னர் ரோபோ என்றும், கேபிக்கு க்ரின்ஜ் ரோபோ என்றும் ஒவ்வொரு ரோபோவுக்கும் ஒரு பட்டப்பெயரை சூட்டி அட்டகாசம் பண்ணி விட்டார் அனிதா சம்பத். அவங்க திருப்பிக் கொடுக்கும் போது, என்ன ஆவாரோ தெரியல.

அப்போ மட்டும் வலிக்கும்

அப்போ மட்டும் வலிக்கும்

மத்தவங்கள ட்ரோல் பண்றதா இருந்தா காமெடி பண்றதா இருந்தா அனிதா சம்பத்துக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. ஆனால், அதுவே அவரை பண்ணும் போது, அழுது ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிடுவார் என அனிதாவின் அராஜகத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X