நான் ஒரு எமோஷனல் இடியட்.. அனிதா சம்பத் அழுததற்கு பின்னாடி இப்படியொரு விஷயம் இருக்கா?

சென்னை: இன்றைய நாளின் இரண்டாம் புரமோவில் காட்டிய காட்சிகள் தான் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒளிபரப்பானது.

Recommended Video

கண்ணீர்விட்ட Anitha Sampath | Emotional moment | Promo 1

நிஷாவை பார்த்தால் தனது அம்மாவை பார்ப்பது போல இருக்கிறது என்றும், என் அம்மா இவரை பார்த்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அனிதா சம்பத் கூறினார்.

அழத் தொடங்கிய அவரை பார்த்ததும் நிஷா கட்டியணைத்து ஆறுதல் சொன்னார்.

செய்தி வாசிப்பாளர்

செய்தி வாசிப்பாளர்

சன் டிவியின் இளம் செய்திவாசிப்பாளரான அனிதா சம்பத் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் போட்டியாளராக கலந்து கொண்டார். அழகிய தமிழில் அவர் பேசும் பேச்சுக்களுக்கும், மேக்கப் இல்லாமல் அழகா இருப்பதையும் பார்த்த ரசிகர்கள் அனிதா சம்பத்துக்கு தனி ஆர்மியை உருவாக்க தொடங்கி விட்டனர்.

யாருக்கு புரோக்கன் ஹார்ட்

யாருக்கு புரோக்கன் ஹார்ட்

ஜித்தன் ரமேஷ் மற்றும் சம்யுக்தாவுக்கு அனிதா சம்பத் புரோக்கன் ஹார்ட் ஸ்டாம்ப் போட்டார். இருவரிடமும் இன்னும் நெருங்கி பழக வேண்டும் என்றார் அனிதா சம்பத். யாரையும் ஹர்ட் பண்ணுவது போல அவர் பேசவில்லை. சம்யுக்தாவிடம் நீங்க நல்லாவே பேசுறீங்க, இன்னும் நல்லா பேசணும் என்றார்.

நிஷாவுக்கு ஹார்ட்

நிஷாவுக்கு ஹார்ட்

பாடகர் வேல்முருகன் மற்றும் அறந்தாங்கி நிஷாவுக்கு ஹார்ட் போட்டார் அனிதா சம்பத். அப்போது பேசிய அவர், நிஷாவை பார்த்தால் தனது அம்மா மாதிரியே உள்ளார் என்றும், அவரும் கருப்பாக இருப்பார் பள்ளி, கல்லூரிகளுக்கு வர கூச்சப்படுவார். ஆனால், நிஷா அக்கா அதையெல்லாம் கடந்து சாதிப்பதை பார்த்து அம்மா கத்துக்கணும் எனக் கூறினார்.

எமோஷனல் இடியட்

எமோஷனல் இடியட்

நிஷா அக்காவையும் பலரும் கிண்டல் செய்கின்றனர். ஆனால், அதையெல்லாம் அவர் பொருட்படுத்துவது இல்லை. நிறம் என்பது பெரிய விஷயம் இல்லை. அவர் தன்னைத் தானே கூட கிண்டல் பண்ணிக் கொண்டு சாதனை செய்யும் விஷயங்களை செய்து அசத்தி கொண்டு இருப்பது போல பலரும் இருக்க வேண்டும் என்று கூறி கண் கலங்கினார். உடனடியாக அனிதாவை அணைத்துக் கொண்டார் நிஷா. நான் ஒரு எமோஷனல் இடியட் என தன்னைத் தானே அனிதா கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X