டாடி நீ வீட்டுக்கு நடந்து வரணும்.. உன்கிட்ட நெறைய பேசணும்.. தந்தையை இழந்த அனிதா சம்பத் உருக்கம்!
சென்னை: அனிதா சம்பந்த் தனது தந்தையின் மறைவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
Recommended Video
சன்டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
80 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

ரயிலில் மாரடைப்பு
இந்நிலையில் அனிதா சம்பத்தின் தந்தை எழுத்தாளர் சம்பத் நேற்று திடீரென மரணமடைந்தார். மகனுடன் கடந்த வியாழக்கிழமை ஷீரடி சென்ற அவர், சென்னை திரும்பும் போது ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

பெரும் சோகம்
அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸுக்கு முன்னதாக தனது தந்தையை சந்தித்து பேசிய அனிதா சம்பத், வெளியே வந்த பிறகு அவரை சந்திக்கவில்லை. அதற்குள் அவர் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நம்ப முடியவில்லை
இந்நிலையில், தந்தையின் மரணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அனிதா சம்பத், எனது தந்தை ஆர்.சி.சம்பத் வயது முதிர்வு காரணமாக திடீரென மரணமடைந்தார். அவருக்கு அல்சர் பாதிப்பு இருந்தது. அவர் இப்போது இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

பேசக்கூட இல்லை
கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக என்னை தனிமைப்படுத்திக் கொள்ள சென்ற போது அவரை சந்தித்தேன். பிக்பாஸ் முடிந்து வீட்டிக்கு வந்ததும் அவர் சீரடி சென்று விட்டார். நான் அவருடன் பேசக்கூட இல்லை. ஏனெனில் அவரது தொலைபேசியில் சிக்னல் இல்லாததால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

டாடி நீ வீட்டுக்கு வரணும்
இன்று காலை 8 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியை அறிந்தேன். அவர் சீரடியில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். நாளை சென்னை வந்திருப்பார். நான் அவர் உயிருடன் இருப்பதாக எண்ணுகிறேன். என்னால் நம்பமுடியவில்லை. டாடி நீ வீட்டுக்கு நடந்து வரணும். உன்கிட்ட நெறைய பேசணும். உன்னுடைய குரல் கேட்டு நூறு நாள் ஆச்சு.

முன்னாடியே தெரிஞ்சிருந்தா
தெரிஞ்சிருந்தா முன்னாடியே பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு முன்னாடியே அப்பா கூட கொஞ்ச நாள் இருந்திருப்பேன். விஜய் டிவி நிகழ்ச்சி திரும்ப வரும். என் அப்பா இனி திரும்ப வரமாட்டாரு. இந்த வாரம் நான் நிகழ்ச்சியில் காப்பாற்றப்பட்டிருந்தால் கடைசியாகக் கூட அப்பாவ பாத்திருக்க முடியாது.

குற்ற உணர்ச்சியாக இருக்கிறது
வாழ்க்கை கணிக்க முடியாதது. எல்லாம் ஒரு காரணத்துடன் தான் நடக்கிறது. பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள். நான் அவரை மிஸ் செய்கிறேன். குற்றவுணர்ச்சியாக இருக்கிறது" இவ்வாறு அனிதா சம்பத் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











