காதலை தவிர கொடுக்க என்கிட்ட ஏதும் இல்ல பப்பு.. கணவருக்கு உருக்கமாக காதலர் தின வாழ்த்து சொன்ன அனிதா!
சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவருக்கு உருக்கமாக வாழ்த்து கூறியுள்ளார் அனிதா சம்பத்.
சன் டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் தனித்துவமாக விளையாடிய போட்டியாளர்களில் ஒருவராகவும் வலம் இருந்தார்.
மேலும் வெளியில் நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்களோ என்ற கான்ஷியஸுடனே இருந்தார் அனிதா சம்பத்.

ஆரியிடம் சண்டை
ஆரம்பத்திலேயே சுரேஷ் சக்கரவர்த்தியுடன் மோதலில் ஈடுபட்டார். இதனால் அப்போதே சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார். இறுதியாக ஆரியிடம் போட்ட சண்டையால் கோபமடைந்த மக்கள் அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றினர்.

உடைந்து போன அனிதா
அனிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த நிலையில் அவரது அப்பா மரணம் அடைந்தார். இதனால் உடைந்து போன அனிதா சில நாட்களுக்கு பிறகு மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவானார்.

பிக்பாஸ் போட்டோக்கள்
தொடர்ந்து பிக்பாஸ் ஃபினாலே மற்றும் பிக்பாஸ் கொண்டாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் அனிதா சம்பத். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார்.

உருக்கமாக வாழ்த்து
இந்நிலையில் அனிதா சம்பத் காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவருடன் பிக்பாஸ் கொண்டாட்டத்தின் போது எமோஷனலாகி எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் தனது கணவருக்கு உருக்கமாக காதலர் தின வாழ்த்தையும் பதிவிட்டுள்ளார்.

இன்னும் நார்மல் ஆகல
இதுதொடர்பான அவரது பதிவில், எல்லா மாசமும் 25ஆம் தேதிய தான் காதலர் தினம் போல எண்ணுவோம்.. feb14 மேல அவ்ளோ ஈடுபாடு இல்ல..அதுவும் இந்த வருடம் 25ஆம் தேதினு தெரிஞ்சும் வாழ்த்திக்கிற நார்மல் நிலைக்கு இன்னும் வரல.. எனினும் உனக்கு காதலர் தின வாழ்த்துகளும் நிறைய காதலும் பப்பு..

என்கிட்ட ஏதுமில்ல பப்பு
உள்ள போனா என்ன நடக்கும்னு உனக்கு தெரியாம இல்ல.. தெரிஞ்சும் என் ஆசைக்காக என்ன தடுக்காம அனுப்பின..
கணவன்ங்கிற ஒரே காரணத்தால உன்னையும் சேர்த்து காயப்படுத்துன அத்தனை விமர்சனஙகளையும் தாங்கிக்கிட்டு, சில விமர்சனத்துக்கு பதிலடியும் கொடுத்து, எனக்காக நான் வெளியே வந்த அப்புறமும் புன்னகையையும் காதலையும் தவிற வேற எதையுமே காட்டிக்காம, வெளிய வந்த உடனே எனக்கு நடந்த இன்னொரு இடியையும் என் கூடவே தாங்கிகிட்டு, உன் வீட்டு சிரமத்தையும் தாங்கிகிட்டு, இன்னக்கி வரைக்கும் என்ன சிரிக்க வைக்க மட்டுமே ஒரு ஒரு நாளும் முயற்சி எடுக்குற உனக்கு என்ன கைமாறு செய்ய போறேனு தெரியல..! காதலை தவிற கொடுக்க என்கிட்ட ஏதும் இல்ல பப்பு..
Recommended Video

நீதான் என் சொத்து
காலம் எல்லாவற்றையும் மாற்றும் பப்பு.. நம்ம கண்ட கனவெல்லாம் விரைவில் நெனவாகும்.. அதுக்காக ஒருத்தர இன்னொருத்தர் கீழ விழும் போதெல்லாம் தூக்கி விட்டுக்குட்டு இதே மாதிரி கனவ நோக்கி பயணிப்போம்.. உன் நேசிப்பு தான் என் ஆகப்பெரிய பெருமை.. சொத்து.. எல்லாம்.. லவ் யூ பப்பு! காதலர் தின நல்வாழ்த்துகள்! இவ்வாறு அனிதா சம்பத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











