ஓஹோ.. சனம் விளையாடிய அளவு கூட அர்ச்சனா விளையாடல.. ஆரியையும் பாலாவையும் கூட்டு சேர்க்கும் அனிதா!
சென்னை: ஸ்பேஸ் இல்லை, ஸ்பேஸ் இல்லைன்னு சொல்லிட்டே, அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்களை வெளியே அனுப்பிட்டு பெரிய ஸ்பேஸ் பிடித்துக் கொண்டு வருகிறார்.
நம்மளோட அடுத்த டார்கெட் அர்ச்சனா அக்கா தான் என்பதை பாலாவுக்கும் ஆரிக்கும் நல்லா புரியும்படி மூளைச் சலவை செய்யும் அனிதாவை பிக் பாஸ் ரசிகர்கள் வச்சு விளாசி வருகின்றனர்.
சனம் விளையாடிய அளவு கூட அர்ச்சனா விளையாடல, என சொல்லும் அனிதா அப்படி என்ன விளையாடிட்டார் என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

பக்கா பிளான்
இன்னும் 4 முதல் 5 வாரங்களே பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ள நிலையில், அடுத்த 6 பேரை வெளியேற்ற பக்காவாக பிளான் போட்டு, சத்தமில்லாமல் எப்படியாவது பைனல் போயிட வேண்டும் என்கிற பிளான் போட்டு அனிதா சம்பத் விளையாடி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஜோடியா விளையாடினா
ஜோடியா விளையாடினா ஜோடியா வெளியே போக வேண்டியது தான், கும்பலா விளையாடினா கூண்டோட கைலாசம்னு கமல் சொன்னாரே என ரம்யாவிடமும் எடுத்து சொல்லி, அவரையும் அர்ச்சனா கேங்குக்கு எதிராக திருப்பி வருகிறார் அனிதா சம்பத். ஜோடியா விளையாடிய கேபி, சோம் வெளியே போகல, ஜித்தன் ரமேஷ், நிஷா வெளியேறியதும், அடுத்து கும்பலா விளையாடுறவங்க தான் வெளியேறணும் என்பதை அழுத்தமாக பதிவு செய்து அர்ச்சனாவை வெளியேற்றும் யுக்தியாக பயன்படுத்தி வருகிறார் அனிதா.

பாலாவுக்கு பிரைன் வாஷ்
திடீரென நல்லவனாக மாறி பைனலுக்கு தான் தான் இங்கே தகுதியானவன் என நினைத்துக் கொண்டு இருக்கும் பாலாஜி முருகதாஸை அனிதா சம்பத் நல்லாவே பிரைன் வாஷ் பண்ண ஆரம்பித்து விட்டார். அர்ச்சனா மற்றும் ரியோ தான் குரூப்பாக விளையாடி வருகின்றனர். அவங்கள வெளியே அனுப்பனும் என குறியாக இருக்கிறார் அனிதா.

சனம் அளவுக்கு விளையாடல
பாலாவை தொடர்ந்து ஆரியிடம் தனியாக பேசிய அனிதா சம்பத், சனம் அளவுக்கு கூட அர்ச்சனா விளையாடல, நாம எல்லாரும் அர்ச்சனா அக்காவை நாமினேட்டே பண்ண மாட்றோம். அவங்க அழகா சேஃப் கேம் ஆடி பிக் பாஸ் வீட்ல இருக்காங்க, ஆனால், நல்லா விளையாடின சனம் ஷெட்டி இப்போ இல்லை என ஆரியையும் மடைமாற்றம் செய்ய பார்க்கிறார்.

அனிதாவுக்கு தெரியும்
அர்ச்சனாவின் பலம் அனிதாவுக்கு நல்லாவே தெரியும். அவர் இருந்தால், தன்னை வெளியே அனுப்பி விடுவார்கள் என்கிற பயமும் அனிதாவுக்கு இருக்கு. சனம் அளவுக்கு அனிதா என்ன விளையாடி விட்டார் என்றும், ஷிவானி, ஆஜீத், கேபி, சோமசேகர், ஏன் பாலா கூட எந்தவொரு கேமிலும் வின் பண்ணலையே, இதை பற்றியெல்லாம் அனிதா ஏன் பேச மறுக்கிறார் என்கிற கேள்வியை கேட்டு, அனிதாவின் ரியல் மாஸ்க்கை கிழித்துத் தொங்கவிட்டு வருகின்றனர்.

எமோஷனல் இடியட்ஸ்
ரியோ ராஜ், அர்ச்சனா ஆகிய இருவரும் எமோஷனல் இடியட்ஸ் தான் என்றே சொல்ல வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியை பெருசா கேமாக பார்க்காமல், போட்டிப் போட்டும் போட்டுக் கொடுத்தும் விளையாடாமல் ஜாலியா விளையாடிட்டு போயிடலாம். பாசம் காட்டிட்டு போயிடலாம் என விளையாடுவது மட்டும் தான் அவர்கள் செய்யும் தவறு என்றும் அன்பு கேங் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நாமினேஷனில் அர்ச்சனா
அனிதா சம்பத் தனித்தனியாக பாலா, ஆரி மற்றும் ரம்யா பாண்டியனிடம் கொளுத்திப் போட்டுள்ளது. இன்றைய நாமினேஷனில் அர்ச்சனாவின் பெயரை அவர்கள் சொல்ல வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார எவிக்ஷன் நாமினேஷனில் அர்ச்சனா நிச்சயம் இடம்பெறுவார். அதே போல, அன்பு கேங்கும் இந்த பிரச்சனையை சும்மா விடாது. ரியோ, அர்ச்சனா, சோம், கேபி உள்ளிட்டோர் அனிதாவையும் ஆரியையும் நாமினேட் செய்வார்கள் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











