பிக் பாஸ் அல்டிமேட்டில் 8வது போட்டியாளர் அனிதா... போட்டிக்கு முன்னாடி என்ன செஞ்சாங்க பாருங்க

சென்னை : கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்றைய தினம் துவங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சி ரசிகர்களை 24 மணிநேரமும் உற்சாகத்துடன் வைத்துக் கொள்ளும் வகையில் தற்போது துவங்கியுள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 70 நாட்கள் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியில் சிறப்பான நிகழ்ச்சியாக பிக் பாஸ் காணப்படுகிறது. 100 நாட்கள் டாஸ்க்கை இதன் போட்டியாளர்கள் சிறப்பாக செயல்படுத்தினர். நிகழ்ச்சி 5 சீசன்களை தற்போது கடந்துள்ளது. இதன் 5வது சீசன் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

இந்த நிகழ்ச்சி முடிவடைந்து விட்டதே என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காணப்பட்டனர். ஆனால் உங்களுக்கு நாங்க இருக்கிறோம் என்று அடுத்ததாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது துவங்கியுள்ளது. ரசிகர்களை 24 மணிநேரமும் என்டர்டெயின் செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி நேற்றைய தினம் துவங்கியுள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு

கடந்த ஒன்று முதல் 5 வரையிலான சீசன்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த போட்டியாளர்கள் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.

முதல் போட்டியாளர் வனிதா விஜயகுமார்

முதல் போட்டியாளர் வனிதா விஜயகுமார்

கடந்த பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு தன்னுடைய அடாவடியால் அனைவரையும் கவர்ந்த வனிதா விஜயகுமார் இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நேற்றைய தினம் கலந்து கொண்டார். இதற்கு முந்தைய நிகழ்ச்சியில் செய்த தவறுகளை சரிசெய்து இந்த முறை வெற்றியடைவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவருக்கு தேன் பாட்டிலை கமல் பரிசளித்தார்.

2வது போட்டியாளர் நிரூப்

2வது போட்டியாளர் நிரூப்

கடந்த 5வது சீசனில் கலந்து கொண்ட நிரூப் இரண்டாவது போட்டியாளராக கலந்து கொண்டார். இதேபோல ஜூலி, அபிராமி, தாமரை, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், 8வது போட்டியாளராக அனிதா சம்பத், சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், அபிநய், சுருதி, சினேகன் போன்றவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

8வது போட்டியாளர் அனிதா சம்பத்

8வது போட்டியாளர் அனிதா சம்பத்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக அனிதா சம்பத் நகைகள் வாங்குவதற்கான ஷாப்பிங்கை தனது கணவருடன் செய்துள்ளார். தாம்பரத்தில் உள்ள பிரபல நகைக்கடைக்கு சென்ற அவர், டெம்பிள் நகைகள், பாம்பே நகைகள் என்று போட்டுக் காட்டி, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X