எம்.ஆர். ராதாவாக மாறிய அனிதா.. குவியும் பிக் பாஸ் மீம்கள்.. கமல் சாரை நாமினேட் பண்றேன் வேற லெவல்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி உடன் இணைந்து டிரெண்டிங் போட்டியாளர் விருது வாங்கிய அனிதா சம்பத், சமீப காலமாக மோசமான போட்டியாளர் என பெயர் எடுத்தார்.

சுமங்கலி விவகாரத்தில் அனிதாவுக்கு சப்போர்ட் பண்ணி பாராட்டிய கமல், இப்போ தன்னை வேண்டுமென்றே குற்றம்சாட்டுகிறார் என அனிதா பேசியதை பார்த்த ரசிகர்கள், அவரை ரொம்பவே ட்ரோல் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

அனிதா தனது புருஷன் கூட எப்படி பேசுவார் என மீம்கள் வைரலாகி வரும் நிலையில், அவரது எம்.ஆர். ராதா பர்ஃபார்மன்ஸ் மீண்டும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை கொடுத்துள்ளது.

ஓட்டு கிடைக்குமா

ஓட்டு கிடைக்குமா

9 பேர் சுசித்ராவையும், 8 பேர் அனிதா சம்பத்தையும் நாமினேட் பண்ணி உள்ள நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அனிதா சம்பத் தான் வெளியேறுவார் என ஏகப்பட்ட பேர் கணித்து வந்தனர். நேற்றைய பர்ஃபார்மன்ஸை பார்த்த ரசிகர்கள், அவருக்கு இப்போ ஓட்டுப் போட ஆரம்பித்துள்ளனர். இந்த வாரம் அனிதா காப்பாற்றப்படுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

எம்.ஆர். ராதாவாக மாறிய அனிதா

எம்.ஆர். ராதாவாக மாறிய அனிதா

ஆரியை அம்மாவாக்கி, அனிதா சம்பத் எம்.ஆர். ராதாவாக மாறி பிக் பாஸ் நிகழ்ச்சியையே ட்ரோல் செய்து பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அனிதா சம்பத்தை பாராட்டி ஏகப்பட்ட மீம்களும் பறக்கின்றன. ராத்திரி 9.30 மணிக்கு எல்லாரும் சோறு சாப்பிடுற நேரத்துல பிக் பாஸ் போட்டுட்டு, பல்லு விளக்கறதையும் டாய்லெட் போக க்யூல நிக்கிறதையும் காட்டுனா எப்படி என கலாய்த்து இருந்தார்.

போடா பன்னி

போடா பன்னி

அதே போல, நேற்றைய நிகழ்ச்சியில், அர்ச்சனா, ஷிவானி, சோமசேகர், அனிதா என எல்லோரிடமும் ஆல் ரவுண்டராக ரவுண்டு கட்டி குழாயடி சண்டை, முடி பிடி சண்டை நடத்திய நிஷவை, சத்தமே இல்லாமல், யாரும் இடுப்பில் கை வைத்து விடாதீர்கள் என கொளுத்திப் போட்டு கிளம்பிய ரமேஷையும் புகழ்ந்து ஏகப்பட்ட ‘போடா பன்னி' மொமன்ட் மீம்கள் வைரலாகி வருகின்றன.

யாருடா நீங்களாம்

யாருடா நீங்களாம்

பாகுபலி காளகேயர்கள், ஜிகிர்தண்டா அழுகினி குமார் போல மாறிய ஹவுஸ்மேட்கள், ஜிப்ரிஷ் மொழியில் பேசுறோங்கிற பேர்ல பண்ண அரட்டைகள் எல்லாம் வேற லெவல் சூர மொக்கை காமெடி. ஆனால், அதையும் விடாமல் மீம் கிரியேட்டர்கள், என்ன பாஷை டா பேசுறீங்க என ஆயிரத்தில் ஒருவன் மீம்ஸை போட்டு ஹைலைட் செய்துள்ளனர்.

தரமான செய்கை

தரமான செய்கை

மூன்று மணி நேரத்தை கணிக்க மூன்று மணி நேரம் ஒரு நிமிடத்தை மட்டுமே பயன்படுத்தி துள்ளியமாக நேரத்தை கணித்த ரியோ ராஜ், ஆரி மற்றும் கேபி டீமின் சூப்பரான ஆட்டத்தையும் ரசிகர்கள் தரமான செய்கை என பாராட்டி வருகின்றனர். பாலா டீம் ஒரு மணி நேரம் கூடுதலாக கணித்ததையும் கலாய்த்து வருகின்றனர்.

Recommended Video

பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
கமல் சாரை நாமினேட் பண்றேன்

கமல் சாரை நாமினேட் பண்றேன்

அனிதாவை எம்.ஆர். ராதாவுடன் கம்பேர் பண்ணி ஒரு பக்கம் பாராட்டி மீம்கள் குவிந்தாலும், பிக் பாஸ் நான் கமல் சாரை நாமினேட் பண்றேன். பிகாஸ் அவரு எனக்கு ஸ்பேஸ் கொடுக்க மாட்டேங்கிறாரு என்பதும், அதற்கு போடப்பட்டுள்ள பாபநாசம் மீமும் வேற லெவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X