இதுக்கு குறும்படம் வேற போடனுமா.. ஒன்னுமில்லாத விஷயத்த ஊதி பெரிதாக்கிய அனிதா.. என்னலாம் பாக்கனுமோ!
சென்னை: ஒன்னுமே இல்லாத விஷயத்த ஊதி பெருசாக்கி மீன் மார்க்கெட் போல ஆக்கிட்டாங்க அனிதா சம்பத்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான புரமோவில் படுசூடான ஒன்று அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இடையே நடந்த வாக்குவாதம்.
அந்த வாக்குவாதத்தை பார்த்த நெட்டிசன்கள் இன்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஒரு வம்பை இழுத்துவிட்டார் என அவரை சாடி வந்தனர்.

கையும் களவுமாக
இந்நிலையில் இன்றைய எபிசோடில் அதன் முழு விவரமும் தெரியவந்துள்ளது. அதாவது கார்டன் ஏரியாவில் அமர்ந்து ஹவுஸ் மேட்ஸ்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டதாக அசத்தலாக கணீர் குரலில் வாசித்தார் அனிதா.

எச்சில் தெறிக்கும்
அப்போது சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட அனைவருமே அவரை பாராட்டினர். இரண்டாவது முறையாக செய்தி வாசித்த போதுதான் அந்த பிரச்சனை வெடித்தது. அதாவது வணக்கம் சொல்லும்போது எச்சில் தெறிக்கும் அதனால் பக்கத்தில் நின்று பேசமாட்டேன் என்றார்.

சூடான ஆர்க்யூமென்ட்
இதனை பெரிதாக்கிய அனிதா சம்பத், மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடம் அதுகுறித்து விவாதித்தார். பின்னர் சுரேஷ் சக்கவர்த்தியிடமே இதுகுறித்து சமையல் அறையில் பேசுகிறார். அப்போதுதான் அந்த சூடான ஆர்க்யூமென்ட் நடைபெறுகிறது.

பொதுவாக பேசவில்லை
நீங்கள் நியூஸ் ரீடர்ஸைதான் சொன்னீர்கள் என்றும் நான் அப்படி சொல்லவே இல்லை என்று சுரேஷ் சக்கரவர்த்தியும் அடித்துக்கொள்ளாத குறையாக பேசிக் கொண்டனர். குறும்படம் போட்டுக் காட்டுங்கள் என அனிதா சொல்ல, குறும்படம் என்ன நெடும் படமே காட்டுகிறேன். நான் நியூஸ் ரீடர்களை பற்றி பொதுவாக பேசவில்லை.

முன்ஜாக்கிரதை
எங்களுக்கு தெரிந்த ஒரு நியூஸ் ரீடர் அம்மா, வணக்கம் சொன்னால் எச்சில் தெறிக்கும் அதைத்தான் சொன்னேன் என்றார். இதுதொடர்பாக பொதுமக்களிடம் விளக்கம் கொடுத்தார் சுரேஷ். மேலும் இனிமேல் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கற்றுக்கொண்டேன் என்றும் கூறினார் சுரேஷ்.

குறும்படம் தேவையா?
சற்று நேரத்திற்கு பிறகு அமைதியான அனிதா சம்பத் வான்ட்டடாக சுரேஷ் சக்கரவர்த்தியை அழைத்து, நீங்கள் ஓகே தானே எனக்கு ஷேக் ஹேண்ட் பண்ணுங்கள் என்று அவருடன் சமாதானம் செய்து கொண்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒன்னுமில்லாத பிரச்சனையை இப்படி ஊதி பெருசாக்கிட்டியேம்மா.. இதுக்கு குறும்படம் வேர தேவையா என்றும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











