ஆட்டோ அனிதா.. ஸ்டார்ட் ஆனா நிறுத்த முடியாது.. கடுப்பான கமல்.. எல்லாம் அனிதா ஆரி பஞ்சாயத்து தான்!
சென்னை: டி.ஆர். மகாலிங்கம் மாதிரி உச்சக்கட்ட சாயலில் அனிதா கோபப்பட ஆரம்பித்து விட்டார். அவரை நிறுத்தவே முடியவில்லை என்று பேசும் அளவுக்கு சனிக்கிழமை எபிசோடிலும் அனிதா சம்பத் நான் ஸ்டாப்பாக பேசித் தள்ளி விட்டார்.
ஒய் பிளட் சேம் பிளட் என்பது போல, அனிதாவின் ஒவ்வொரு பேச்சுக்களும் ரசிகர்களை இம்சித்து வருகின்றன.
குழந்தை உள்ளம் கொண்டு இருந்தாலும், இவங்க கோவக்கார கன்னுக்குட்டியா இந்த வாரம் சீறியதால், வீட்டில் அனுப்பப்பட வேண்டியவர்களை விட்டு விட்டு அனிதா வெளியேற நேர்ந்து விட்டது.

அன்பு கேங் கோட்டை
அசைக்க முடியாத அளவுக்கு 6 பேர்களை கொண்டு அர்ச்சனா கட்டி வைத்த அன்பு கேங் கோட்டையையே தனி ஒருத்தியாக அனிதா சம்பத் உடைத்துத் தள்ளி விட்டார். உங்களுக்கு கொடுத்த வேலை முடிஞ்சிடுச்சு நீங்களும் கிளம்புங்க என பிக் பாஸ் டீம் இந்த வாரம் அனிதா சம்பத்தையும் பார்சல் செய்து விட்டனர்.

தெரியுமா தெரியாதா
அனிதா சம்பத்துக்கு கடைசி வரை சமைக்க தெரியுமா? தெரியாதா? என்கிற குழப்பத்திலேயே ரசிகர்களை வைத்துள்ளார். ஓ அதெல்லாம் செய்வீங்களா என கமல் கலாய்ப்பதை புரிந்து கொண்டு பக்கத்தில் இருக்கும் ரம்யா முதல் கடைசியில் இருக்கும் ரியோ வரை வாயை மூடி சிரித்துக் கொண்டிருப்பது கூட புரியாமல் மறுபடியும் சமைக்க தெரியும் என அனிதா பேசுவது வெகுளித்தனம்.

ஸ்டாப் பண்ணிடுறாங்க
இந்த வீட்டில் பேசும் போது பேச்சு சுதந்திரமில்லை என ஃபீல் பண்ணது அனிதா கிட்ட மட்டும் தான் சார் என கமலிடம் ஆரி சொன்னதை கேட்டதும் கமல் பேச ஆரம்பிப்பதற்குள் பேச ஆரம்பித்த அனிதா ஆட்டோ ஸ்டார்ட் ஆகி ஸ்டாப் ஆகாமல் போய்க்கொண்டிருப்பது போல தொடர்ந்து பேச ஆரம்பித்து விட்டார்.

ஃபேமிலி வீக்னெஸ்
சார் என்னோட ஃபேமிலி எனக்கு பெரிய வீக்னெஸ் சார், தனியா அர்ச்சனா அக்கா கிட்ட பேசுனதை பப்ளிக்கா பேச ஆரம்பிச்சிட்டார். அம்மா அப்பா பத்தி பேசினாரு, அடுத்து புருஷனை பத்தி பேசும் போது தான் ரொம்ப கோவப்பட்டு கத்திட்டேன் சார், நான் எப்பவுமே கோபப்பட்டு கத்திடுவேன் அப்புறம் தான் அது தப்புன்னு உணர்வேன்..

அப்படியே பேசிடுவேன்
அப்படியே பேசிடுவேன், சாரி சொல்ல புடிக்காது. சாரி சொல்ல போய் அது ஒரு பெரிய சண்டையாக வந்திடுமோ என கொஞ்சம் பயம் இருக்கு, சாரி ஆரி என கண்ணீரும் கம்பளியுமாய் எங்கேயும் நிறுத்தாமல் அதிரடியாய் பேச ஆரம்பித்த அனிதாவை ரியோ பார்த்த பார்வைகளுக்கெல்லாம் விளக்கமே சொல்ல முடியாது அந்த அளவுக்கு இருந்தது.

கடுப்பான கமல்
அனிதா சம்பத் இப்படி அனுமார் வால் மாதிரி ரொம்ப லெந்தா பேசிட்டே போனதை கேட்டதும் சம்யுக்தா போல கமலும் சிறிதே கடுப்பாகி விட்டார். உங்களுக்காகத்தான் அனிதா பேச வந்தேன், வேண்டாம்னா நீங்களே பேசிடுங்க என கமல் சொல்ல, சார் நீங்களே பேசுங்க என அனிதா கமலுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











