Just In
- 11 min ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 45 min ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 54 min ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 1 hr ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- News
கோவையில் முதல்வர்.. திருப்பூரில் ராகுல் காந்தி.. கோலாகல கொண்டாட்டத்தில் கொங்கு மண்டலம்!
- Sports
களத்திற்கு வரும் சர்ச்சை வீரர்.. சிஎஸ்கே உட்பட குறி வைக்கும் 3 அணிகள்.. சம்பவம் நடக்கும் போலயே!
- Finance
ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்!! 2020 இறுதியிலும் தொடர்ந்துள்ளது!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மறுபடியும் அனிதாவுக்கு ஸ்பேஸ் இல்லையா? பாலா மாதிரியே முரண்டு பிடிக்க ஆரம்பிச்சிட்டாரே!
சென்னை: கடந்த இரு வாரங்களுமே அனிதா சம்பத் வெளியேற வேண்டிய வாரங்கள்.
இதுல நான் 2வது இடத்துல நிப்பேன்னு எப்படி மனசாட்சியே இல்லாமல் அடம்பிடிக்கிறார் அனிதா என பிக் பாஸ் ரசிகர்கள் மூன்றாவது புரமோவை பார்த்து ஓட்டி வருகின்றனர்.
அனிதாவின் ஆர்மியினர், ரியோவை அனிதா கிழித்துத் தொங்கவிட்டதுக்கு அவருக்கு 2வது இடம் தாராளமா கொடுக்கலாம் என சப்போர்ட் செய்து வருகின்றனர்.

சீறிய ஜித்தன்
தூங்கிக்கிட்டு இருந்த ஜித்தன் ரமேஷுக்கு இந்த வாரம் கேப்டன் பதவியை தூக்கிக் கொடுத்ததும், ரொம்பவே சின்சியரா வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாரு.. பாலா முதல் ஆளாக முதல் புரமோவில் எழுந்து பேசிய உடனே, நீ ஏன் எப்பப் பாரு முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாடி வந்து பேசுறன்னு, ஜித்தன் எழுந்து நின்னு பேசிய உடனே பாலா ஆஃப் ஆகிட்டார்.

சனம் அட்டகாசம்
இரண்டாவது புரமோவில் சனம் ஷெட்டி, முதல் இடத்தில் நின்றுக் கொண்டு, எனக்குத் தான் இந்த இடம் என காமெடி பண்ணிக் கொண்டு இருந்தார். சனம் ஷெட்டிக்கு அதுக்கு தகுதியே இல்லை என பாலாவும், சனமை பாடி லாங்குவேஜ்லாம் பண்ணி ஜித்தன் ரமேஷும் கலாய்த்து பின்னாடி தள்ளினார்கள்.

அனிதாவுக்கு ஸ்பேஸ் இல்லை
முதல் புரமோவில் பாலா, இரண்டாவது புரமோவில் சனம் ஷெட்டி, மூன்றாவது புரமோவில் அனிதா, இவங்க மூன்று பேர் தான் பிக் பாஸ் வீட்டில் இப்போதைக்கு பிரச்சனைகளை கிளப்பி கன்டென்ட் தருபவர்களாக இருக்கிறார்கள். மூன்றாவது புரமோவில் 2வது இடத்தில் இருந்து அனிதாவை வெளியேற்றதும், தனக்கு எந்த இடமும் வேண்டாம் என தள்ளிப் போய் உட்கார்ந்து கொண்டார்.

முதல் இடத்தில் ஆரி
சனம் ஷெட்டி முதல் இடத்துக்கு சண்டை போட்ட நிலையில், சத்தமே இல்லாமல் ஆரி அர்ஜுனா முதல் இடத்தில் நிற்கும் காட்சி புரமோ மூலம் தெரிகிறது. அனிதா சம்பத்துக்கு இரண்டாவது இடம் கொடுக்காத நிலையில், அவருக்கு மீதம் உள்ள பத்தாவது இடத்தில் வந்து நிற்கும் படி ஹவுஸ்மேட்கள் பணித்தனர்.

நிற்கமாட்டேன்
எனக்கு எந்த இடமும் வேண்டாம், நான் 10வது இடத்துல நிற்க மாட்டேன் என பாலா மாதிரியே அனிதா அடம் பிடிக்கிறார் என்றும், ரம்யா பாண்டியன் எல்லாம் பின்னாடி போய் நிக்கிறாங்க, நீ ஏன் மா நிக்க மாட்டேங்கிற, இது சும்மா ஹவுஸ்மேட்ஸ் கொடுக்கிற இடம் தான, வெளியே ரசிகர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு இடத்தை கொடுத்து வச்சிருக்காங்க, அதை பற்றி நினைக்கலாமே அனிதா என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.