ஜித்தன் ரமேஷ் எப்படி பர்ஃபார்மன்ஸ் பண்ணாரு.. கேட்ட கமல்.. ஓப்பனா உடைத்து சொன்ன அனிதா!
சென்னை: கண்ணாடி அறைக்குள் அடைக்கப்பட்டதற்கு அனிதா சம்பத் ரொம்பவே அப்செட் ஆகி ஆர்ப்பாட்டம் பண்ணினார்.
ஆனால், அவர் கூடவே போரிங் போட்டியாளர் என்ற பட்டத்துடன் இரண்டாம் முறையாக ஜெயிலுக்குப் போன ஜித்தன் ரமேஷ், போனாமோ அங்கேயும் படுத்து தூங்கினோமா என்று இருந்தார்.
ஜித்தன் ரமேஷின் பர்ஃபார்மன்ஸ் பற்றி ஹவுஸ்மேட்கள் சொல்ல தயங்கிய நிலையில், அனிதா சம்பத் ஒப்பனா உடைத்து சொல்லிவிட்டார்.

ரெஸ்ட் ரமேஷ்
ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என ஜித்தன் ரமேஷுக்கு ஹவுஸ்மேட்கள் பெயர் வைத்தாலும், அவர் எப்போதுமே ரிலாக்ஸாக ரெஸ்ட் ரமேஷாகத் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். நீங்க என்ன இந்த வாரம் பர்ஃபார்ம் பண்ணீங்கன்னு கேட்டதற்கு நிறையவே பண்ணேன் சார் என பாத்திரம் கழுவியதை, பாத்ரூம் கழுவியதையும் மட்டுமே சொன்னார்.

சொல்லவே இல்லை
போரிங் போட்டியாளராக ஜித்தன் ரமேஷையும் அனிதாவையும் கண்ணாடி சிறைக்குள் அனுப்பிய ஹவுஸ்மேட்ஸ், கமல் நடத்திய போரிங் போட்டியாளர் தேர்வில் யாருமே ஜித்தன் ரமேஷ் பெயரை சொல்லவே இல்லை. எல்லாரும் நிஷா மற்றும் ஆரியை டார்கெட் பண்ண ஆரம்பித்தனர். அனிதா மட்டுமே ரமேஷ் பெயரை சொன்னார்.

தயங்கிய ஹவுஸ்மேட்ஸ்
பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட ஹவுஸ்மேட்கள், ஜித்தன் ரமேஷின் பர்ஃபார்மன்ஸ் பற்றி பேசினாலும், எதையுமே முழுசா சொல்லாமல் ரொம்பவே தயங்கினார்கள். ஜித்தன் ரமேஷ் நல்லாவே பண்ணார் என்றே அவரது அன்பு கேங் ஆட்கள் கமல் கேட்டபோது ஆதரவாக பேசினர்.

போட்டு உடைத்த அனிதா
ஒருவேளையும் ஜித்தன் ரமேஷ் பண்ணவில்லை என்றும், போன வாரம் கேப்டன் பதவி கிடைத்தும், எல்லா வேலையையும் நிஷா அக்காவை வைத்தே வாங்கினார் என்றும், நிஷா தான் போன வாரம் கேப்டனாக செயல்பட்டார் என மற்றவர்கள் பேச தயங்கியதை ஒட்டுமொத்தமாக போட்டு உடைத்தார் அனிதா.

சூப்பர் செண்ட் ஆஃப் இல்லை
மற்ற பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்தது போல சூப்பரான செண்ட் ஆஃப் ஜித்தன் ரமேஷுக்கு கொடுக்கப்படவில்லை. வித்தியாசமாக செய்யலாம் எனக் கூறிவிட்டு, அப்படியே கன்ஃபெஷன் ரூமில் இருந்து கமல் ஷோ நடத்தும் இடத்திற்கு கொண்டு வந்து விட்டனர். இனி வீட்டில் படுத்துக் கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications











