பாலா அந்த ஆடியோவை லீக் பண்ணல.. பிக் பாஸ் போட்டியாளர்களிடையே முற்றிய மோதல்.. அனிதா சம்பத் ட்வீட்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 முடிந்து 6 மாதங்கள் கடந்து மீண்டும் அது தொடர்பான சர்ச்சைகள் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளன.
ஆரி, பாலா, அனிதா சம்பத் மற்றும் ரவீந்திரன் உள்ளிட்ட நான்கு பேரும் தான் இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளனர்.
பாலா லீக் செய்ததாக அனிதா சம்பத் சொன்ன நிலையில், தற்போது பாலா அதனை லீக் செய்யவில்லை என ட்வீட் போட்டுள்ளார்.

ஆரியின் வெற்றி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரி வெற்றி பெற தான் தான் முழுக்க முழுக்க காரணம் என தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசியுள்ள ஆடியோ சர்ச்சையை கிளப்பியது. மேலும், அனிதா சம்பத்துக்கு ஆரி வெற்றியடைந்தது பிடிக்கவில்லை என்றும் பேசி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

பாலா தான்
பாலா தான் அந்த ஆடியோவை லீக் பண்ணாரு.. நான் எப்பவுமே ஆரிக்குத் தான் சப்போர்ட் என அனிதா சம்பத் வரிசையாக ட்வீட்களையும் ஆடியோக்களையும் வெளியிட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. மேலும், ரவீந்திரனுக்கும் அனிதாவுக்கும் நேரடியான மோதல் வெடித்தது.

ஒண்ணுமில்லாத மேட்டர்
பிஹைண்ட்வுட்ஸுக்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை மடைமாற்ற ஆரியின் பிரச்சனை கிளப்பபடுகிறது என பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஒரு லைஃப் தான்.. ஒண்ணுமில்லாத மேட்டருக்கு தேவையில்லாமல் என் நேரத்தை நான் செலவிட மாட்டேன்.. இந்த சின்ன விஷயத்துக்காக ட்வீட் போட கூட விரும்பவில்லை என அனிதா சம்பத் விஷயத்தை கையாண்டு உள்ளார் பாலா.

ரவீந்திரன் மிரட்டல்
பழைய ஆடியோவை வெளியிட்டு தப்பிக்க பார்க்குறீங்களா.. அனிதா சம்பத் பற்றி பாலா எப்படி பேசினார் தெரியுமா? உங்களை பற்றிய உண்மைகளை வெளியே கொண்டு வரவா என அனிதாவை மிரட்டும் தொனியில் ரவீந்திரன் ட்வீட் போட, அனிதா போதும்டா சாமி நீ ஏற்கனவே பண்ண டேமேஜ் என அமைதியானார்.

பாலா ரசிகர்கள்
பாலா தான் அந்த சர்ச்சையை கிளப்பிய ஆடியோவை வெளியிட்டார் என அனிதா சம்பத் சொன்னது பெரும் பிரச்சனையை உருவாக்க பாலாஜி முருகதாஸின் ரசிகர்கள் அனிதா சம்பத்தை திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக தற்போது அனிதா ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அனிதா சரண்டர்
இந்நிலையில், தற்போது லேட்டஸ்ட்டாக தனது ட்விட்டர் பக்கத்தில் அனிதா சம்பத் அந்த ஆடியோவை பாலா வெளியிடவில்லை Fatmanleaks என்கிற அடையாளம் தெரியாத ஐடி தான் வெளியிட்டது. நான் தான் தவறாக புரிந்து கொண்டேன். மேலும், அனைத்து பிரச்சனைகளும் நேற்றே முடிவுக்கு வந்து விட்டது என பாலா ரசிகர்களிடம் சரண்டர் ஆகி உள்ளார் அனிதா சம்பத்.


Click it and Unblock the Notifications











