ஓவரா ஒப்பாரி வச்சு அழுத அனிதா.. சனம் ஷெட்டி வெளியேறியதை விட ரசிகர்களை எர்ச்சலூட்டியது அதுதான்!
சென்னை: இந்த வாரமும் எந்த ட்விஸ்ட்டும் இல்லாமல், சனிக்கிழமையே கசிந்தது போல சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அட்ஜெஸ்ட்மென்ட் வார்த்தைக்காக பாலாவுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவாங்கன்னு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் முன்னதாக கிளம்பிய நிலையில், பாலாவுக்கு முன்பாக சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
சனம் ஷெட்டி சிரித்த முகத்துடன் வெளியேறிய நிலையில், அனிதா சம்பத் அழுது ஒப்பாரி வச்சது ரசிகர்களை ரொம்பவே எரிச்சலூட்டியது.

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது
ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது என்கிற ட்ரோல் மொழியை அனிதா சம்பத்தை பார்த்தே ரசிகர்கள் வைத்து வருகின்றனர். இந்த வாரம் கண்டிப்பாக நான் தான் வெளியேறுவேன் என உண்டியலில் இருந்த காசுகளை எல்லாம் உடைக்காமல், நைஸா எடுத்து வைத்த காட்சிகளை எல்லாம் பார்த்து ரசிகர்கள் ரொம்பவே இரிடேட் ஆகி விட்டனர்.

லீக்கான எவிக்ஷன்
இரண்டாவது வாரத்தில் நடிகை ரேகா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது முதல், இந்த வாரம் நடிகை சனம் ஷெட்டி வெளியேறியது வரை நிகழ்ச்சிக்கு முதல் நாளே சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகி விட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி வெளியேறுகிறார் என்று கசிந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியானது.

சனம்க்கு தான் ஆதரவு
பிக் பாஸ் ரசிகர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் போட்டியாளர்களும் அதிகபட்சமாக சனம் ஷெட்டிக்குத் தான் ஆதரவு தெரிவித்தனர். நடிகர் ஆரி அர்ஜுனாவுக்கு அடுத்தபடியாக சனம் ஷெட்டிக்குத் தான் ஓட்டுக்கள் குவிந்தன என கணிப்புகள் வெளியான நிலையில், இந்த முறையும் விஜய் டிவி தனது ஏமாற்று விளையாட்டை விளையாடி விட்டதாகவே ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சுரேஷ் தாத்தாவை போல
மொட்டை தல சுரேஷ் தாத்தாவின் வெளியேற்றத்தையும் ரசிகர்கள் எதிர்பார்க்கவும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதே போல தான் இப்போ வெளியேற்றப்பட்டுள்ள சனம் ஷெட்டியின் எவிக்ஷனையும் ரசிகர்கள் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இது முற்றிலும் மோசடியான வேலை தான் என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஒப்பாரி வைத்த அனிதா
சனம் ஷெட்டி, ஷிவானி, அனிதா என கடைசியில் 3 பேர் இருந்த நிலையில், நான் தான் வெளியே போவேன் என அனித ரொம்ப சீன் போட்டார். ஆனால், கமல் சார் சனம் என்ற பெயரை காட்டி வெளியே அனுப்பிய நிலையில், அனிதா சம்பத், சனமை கட்டிப்பிடித்து அழுது ஒப்பாரி வைத்தது ரசிகர்களை ரொம்பவே எரிச்சலூட்டியது.

அடுத்த பாயாசம்
சுசித்ரா, சம்யுக்தா என ஒவ்வொரு வாரமும் அனிதா சம்பத் வெளியேற வேண்ட நிலையில், மற்றொருவருக்கு பாயாசத்தை போட்டு அனிதா வெளியேற்றி வருகிறார். இந்நிலையில், இந்த வாரம் சனம்க்கு சூப்பரான பாயாசத்தை போட்டு வெளியே அனுப்பி விட்டார். இந்த வாரமும் எஸ்கேப் ஆன அனிதா அடுத்த வாரம் யாருக்கு பாயாசம் போடப் போகிறார் என்பதை காத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











