நான் சோலோவா 12 பேருக்கு சோறாக்கிப் போட்டேன்.. கமல் முன்னாடி ஓவரா நடித்து அலம்பல் பண்ண அனிதா!

சென்னை: கேப்டனா இருந்த என்னை ஏன் போரிங் போட்டியாளர் என நாமினேட் பண்ணாங்கன்னு கேளுங்க கமல் சார் என்கிற ரேஞ்சுக்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிய அனிதா சம்பத்தின் ஓவர் ஆக்டிங்கையும் சமூக வலைதளத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Recommended Video

மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா. | Call Centre Task

எப்பவோ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்க வேண்டியவர் அனிதா சம்பத் என்றும், 12 பேருக்கு சோறாக்கிப் போட்டேன் அதுக்காக என்னை பெஸ்ட்டுன்னு சொல்லணும்னு அழுது அடம்பிடிப்பது எல்லாம் சரி இல்லை எனவும் வெளுத்து வருகின்றனர்.

ஒத்துக்க மாட்டேன்

ஒத்துக்க மாட்டேன்

போரிங் போட்டியாளர்னு ஹவுஸ்மேட்ஸ் உங்களை சொன்னதை ஒத்துக்குறீங்களா அனிதா என கமல் கேட்டதும், இல்லை கமல் சார், ஒத்துக்க மாட்டேன். அதுக்காக எனது கருத்தையும் பதிவு செஞ்சேன். கண்ணாடி ரூமுக்கு போகாமல் இருந்தால் அது ரூல்ஸ் மீறுவதாக ஆகிவிடும் என்பதற்காகத்தான் போனேன் என பேசினார்.

கம்பேர் பண்ணி பேசினார்

கம்பேர் பண்ணி பேசினார்

ரியோவிடம் இது தொடர்பாக கமல் கேட்டதும், நிஷாவை அவர் கம்பேர் பண்ணி பேசினார். அதனால், தான் எனக்கு புடிக்கவில்லை நான் போரிங்னு அனிதாவை சொன்னேன் கமல் சார் என்று மீண்டும் நிஷாவுக்கு சப்போர்ட் பண்ணி அனிதாவை டார்க்கெட் பண்ணியே ரியோ பேசினார்.

கேப்டனா இருந்தேன்

கேப்டனா இருந்தேன்

இந்த வாரம் கேப்டன் டாஸ்க்கில் வின் பண்ணி கேப்டன் ஆனேன். எல்லாரையும் காலையில ஒழுங்கா எழுப்பி, மைக் மாட்ட சொல்லி, பேட்டரி செக் பண்ண சொல்வதில் இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கிட்டேன். கேப்டனா இருந்த என்னை எப்படி போரிங்னு சொல்லலாம் என அனிதா சண்டை பிடித்தார். ஏற்கனவே ரியோ கேப்டனாக இருக்கும் போது, அவரை போரிங்னு சொல்லி ஜெயிலில் போடலையா?

சோலோவா சோறாக்கிப்போட்டேன்

சோலோவா சோறாக்கிப்போட்டேன்

கேப்டனா இருந்து வீட்டை பார்த்துக்கிட்டேன், ரோபோ டாஸ்க் விளையாடும் போது மனிதர்கள் தான் சோறாக்கிப் போடணும் என்பதற்காக, 12 பேருக்கும் சோலோவா சோறாக்கிப் போட்டேன். என்னைப் போய் எப்படி போரிங்னு சொல்லலாம் என ரொம்பவே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிய அனிதாவை பார்க்கவே சகிக்கல.

மாற்றிப் பேசிய ரியோ

மாற்றிப் பேசிய ரியோ

இதையெல்லாம் நீ அப்போ சொல்லியிருந்தேனா அனிதா, நான் உன்னை போரிங்னு நாமினேட் பண்ணியிருக்க மாட்டேன் என அப்படியே ரியோ ராஜ் பல்டி அடித்து பேசிவிட்டார். அனிதாவை விட்டால், அடுத்து ஆரி தான் டார்கெட் என்று கமல் சார் போரிங் போட்டியாளரை தேர்வு செய்ய சொல்லும் போதும், அன்பு கேங் நிஷாவை தேர்வு செய்யவில்லை.

நாமினேஷன் ஆனாவே

நாமினேஷன் ஆனாவே

அதே போல அனிதா சம்பத் நாமினேஷனுக்கு வந்தாலே, உடனடியாக அவரது கேரக்டர் டோட்டலாகவே மாறி விடுகிறது. வெளியே போய்விடுவோமோ என்கிற பயத்தின் காரணமாக, எதிர்த்து பேசி, தனது இருப்பைக் காட்டிக் கொள்ளவதை ஒவ்வொரு வாரமும் அனிதா சம்பத் அழகா கடைபிடித்து எவிக்‌ஷனில் இருந்து எஸ்கேப் ஆகி வருகிறார். இவரும் வெளியேற வேண்டியவர் தான். விஜய் டிவியா இருந்தா என்ன? சன் டிவியா இருந்தா என்ன?

ஹைலைட் அனிதா

ஹைலைட் அனிதா

கமல் சார் போரிங் போட்டியாளர் டாப்பிக்கை எடுத்து பேசியதும், இதுக்குத்தான் வெயிட் பண்ணேன். நீங்க எனக்காக பேசியதற்கு ரொம்ப நன்றி சார், இதுவே போதும், நிஷா அக்காவை எனக்காக எல்லாம் ஜெயிலுக்கு அனுப்பாதீங்க என ஒவ்வொரு நிமிடமும் கமல் சார் தனக்காகத் தான் இதை செய்தார் என்பதை ஹைலைட் பண்ணி காட்ட காட்ட கடுப்பான கமல், யாருக்கு நேர்ந்தாலும், இதைத் தான் செய்வேன் என்றார். ஆனால்? எத்தனை முறை ஆரிக்கு நேர்ந்தபோது, வேற யாரையும் ஜெயிலுக்கு அனுப்பவில்லை கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X