நெருப்புடா.. அன்பு கேங்கை.. அக்குவேர், ஆணிவேராக பிடுங்கும் அனிதா.. வாய்பிளந்து பார்க்கும் அர்ச்சனா!
சென்னை: அர்ச்சனாவை அக்குவேர், ஆணிவேராக அனிதா கிழித்துத் தொங்கவிடும் 2வது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அன்புடா, பாசம்டா அது எல்லாம் நம்ம கேங்குள்ள மட்டும்டா என அர்ச்சனா அழகாக பிளான் போட்டு விளையாடி வருகிறார்.
அதை நன்றாக அறிந்து வைத்துள்ள அனிதா சம்பத், ஒட்டுமொத்தமாக வெடித்துத் தள்ளி வருவது ரசிகர்களை பரபரப்பாக்கி உள்ளது.

முதல் புரமோவில் ரியோ
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் ரியோ ராஜை தரமாக வச்சு செய்யும் அனிதா சம்பத், இரண்டாவது புரமோவில், அன்பு தெய்வம் அர்ச்சனா அக்காவையும் விட்டு வைக்கவில்லை. உங்க டீம் மட்டுமே பைனலுக்கு போக வேண்டும் என நல்லாவே பிளான் போட்டு விளையாடுறீங்க என வெளுத்து வாங்கி உள்ளார்.

அகப்பட்டார் அர்ச்சனா
அர்ச்சனா அழுதது போரிங்காக தெரியலையா என ரியோவிடம் கேட்டதுமே, அர்ச்சனா அங்கிருந்து வந்து, தனது தரப்பு விளக்கத்தை கொடுக்க முன் வருவது போல அனிதா சம்பத்தை பகிரங்கமாக மிரட்டும் தொனியில் பேசுகிறார். இனிமே உங்களைப் பத்தி பேசமாட்டேன் அர்ச்சனா என அனிதா அர்ச்சனாவுக்கு நோஸ் கொடுப்பது செம!

கோர்த்துவிடும் அனிதா
அன்பு கேங்கை டோட்டலாக உடைக்கும் முனைப்போடு செயல்பட ஆரம்பித்து விட்டார் அனிதா சம்பத் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஓட்டுப் போட்டு வருகின்றனர். நீங்களே சீரியஸ் ஆகும் அளவுக்கு நிஷா அக்கா அப்படி பேசியிருக்காங்க என அர்ச்சனாவை முற்றிலுமாக வாயடைத்துப் போக செய்துவிட்டார்.

ஸ்தம்பித்த அர்ச்சனா
தொடர்ந்து அர்ச்சனாவை அட்டாக் பண்ணும் விதமாக அனிதா சம்பத் கேள்விகளை அடுக்கி வந்த நிலையில், என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் ஸ்தம்பித்து அர்ச்சனா, அனிதாவையே பார்ப்பது போல பிக் பாஸ் எடிட்டர் இரண்டாவது புரமோவை கட் பண்ணி இருக்கிறார். ஷோவில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











