அன்னைக்கு நடுவிரல்.. இன்னைக்கு இப்படியா.. சுரேஷ் பேசும் போது அனிதா ரியாக்ஷன்.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தி கமலிடம் பேசும் போது அனிதா சம்பத் அவரை கேவலப்படுத்தும் வகையில் கொடுத்த ரியாக்ஷனை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சீசன்களை காட்டிலும் படு விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக செய்தி வாசிப்பாளரான அனிதா செய்யும் வேலைகள் மக்களின் பிபியை எகிற வைத்து வருகிறது.
கடந்த வாரம் முழுக்கவுமே சுரேஷ் சக்கரவர்த்தியை வம்பிழுப்பதும் அவரிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வதையுமே பணியாக கொண்டிருந்தார் அனிதா.

கமல் சந்திப்பு
இதனால் அனிதா எவிக்ஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தால் அவரைதான் முதல் ஆளாக வெளியேற்ற வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முதல் முறையாக பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்தார் கமல்.

சுரேஷைதான் கண்டித்தார்
அப்போது, மரியாதை குறைவாக பேசியது மற்றும் வீணாக வம்பிழுப்பது சம்பந்தமாக அவரை கமல் கேள்வி கேட்பார் கண்டிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் சுரேஷ் சக்கரவர்தியைதான் கண்டித்தார்.

அனிதா ரியாக்ஷன்
இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கமலிடம் சுரேஷ் சக்கரவர்த்தி தனது தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லிக் கொண்டிருந்த போது, அனிதா சம்பத் கொடுத்த ரியாக்ஷன் பலரையும் கடுப்பேற்றியுள்ளது.

அபாண்ட குற்றச்சாட்டு
சலிப்போடு சுரேஷ் சக்கரவர்த்தியை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வாய்க்குள்ளேயே முனகுகிறார். அதோடு ஒருத்தரை குத்த அவர் யாரையோ ஆயுதமாக பயன்படுத்துகிறார் என தோன்றுகிறது என்றும் கமல் முன்பு அபாண்டமாக குற்றச்சாட்டை கூறுகிறார்.

காரித்துப்பாதவர்களே இல்லை
இந்நிலையில் அனிதா சம்பத் சுரேஷ் சக்கரவர்த்தி பேசும் போது கொடுத்த கேவலமான ரியாக்ஷன் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்து அனிதா காரித்துப்பாதவர்களே இல்லை. உன் அளவுக்கு ஜூலியோ அல்லது வனிதாவோ மோசமில்லை என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

சுரேஷ் பெட்டர்
சுரேஷ் சக்கரவர்த்தி பேசும் போது இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுத்துட்டு அடுத்த 2 நிமிஷத்துக்குள்ள போயிட்டு ஹேண்ட் ஷேக் பண்ணுனாங்க. ரெண்டு பேருக்கும் ஈகோ இருக்கு.. ஆனால் அனிதா சம்பத்தை விட சுரேஷ் பெட்டர்.. அவர் இப்படி ஃபேக்கா பிஹேவ் பண்ணல.. என கூறி அனிதா ரியாக்ஷன் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

எரிச்சலூட்டும் முகம்
அனிதா சம்பத் கொடுத்த அந்த கேவலமான ரியாக்ஷனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், இந்த ரியாக்ஷனே எல்லாவற்றையும் சொல்லிவிடும்.. டிவியிலேயே மிகவும் எரிச்சலூட்டும் முகம் இதுதான் என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இரிட்டேட்டிங் ரியாக்ஷன்
கமல்ஹாசன் சுரேஷ் கிட்ட பேசிட்டு இருக்கும் போது அனிதா சம்பத் ஓட ரியாக்ஷன் இரிட்டேட்டிங்.. என்று கூறியுள்ள இந்த நெட்டிசன், அனிதாவின் அந்த வரலாற்று சிறப்புமிக்க ரியாக்ஷனையும் ஷேர் செய்துள்ளார்.

தன்னைத்தானே கேவலப்படுத்தி..
ஏற்கனவே சுரேஷ் சக்கரவர்த்தி கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தனது அனுபவங்களை கூறிய போது, அனிதா சம்பத் நடுவிரலை காட்டியதாக சர்ச்சை எழுந்தது. அது தொடர்பான போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது சுரேஷை கேவலப்படுத்துவதாக நினைத்து தன்னைத்தானே கேவலப்படுத்திக் கொண்டார் அனிதா.


Click it and Unblock the Notifications











