வீட்ல விசேஷமாம்.. கணவருடன் ஹோம்லி லுக்கில் அனிதா சம்பத்.. என்ன மேட்டர் என கேட்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: ஃபேமிலி ஃபங்ஷன் என அனிதா சம்பத் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த் நெட்டிசன்கள் என்ன விஷயம் என கேட்டு வருகின்றனர்.

சன் டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், தனது வேலையை விட்டுவிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதில் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். இருந்த போதும் டாஸ்க்குகளில் நேர்மையாக விளையாடியதால் அவருக்கு ஆதரவும் அளித்தனர்.

அப்பாவின் மரணம்

அப்பாவின் மரணம்

ஒரு கட்டத்தில் ஆரியிடம் அவர் முகத்தைக் காட்டியதை பார்த்த ரசிகர்கள் செம கடுப்பாயினர். இதனால் அவருக்கு வாக்களிக்காமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். இதனை தொடர்ந்து வெளியே வந்த அனிதாவுக்கு அவரது அப்பாவின் மரணம் பேரிடியாக இருந்தது.

சோஷியல் மீடியாவில் போட்டோஸ்

சோஷியல் மீடியாவில் போட்டோஸ்

அனிதா அப்பாவின் மரணத்தை தொடர்ந்து அவர் மீதிருந்த கோபத்தை மறந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அனிதா சம்பத் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஹோட்டலில் சந்திப்பு

ஹோட்டலில் சந்திப்பு

அந்த வகையில் அண்மையில் தனது நாத்தனார் மகளின் காது குத்து விழாவின் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் அனிதா. இதனை தொடர்ந்து ரம்யா பாண்டியனின் அம்மா மற்றும் அக்கா, பிக்பாஸ் போட்டியாளரான சம்யுக்தா ஆகியோருடன் ஹோட்டலில் சந்தித்த போட்டோவை ஷேர் செய்தார்.

கணவருடன் ஹோம்ளியாக..

கணவருடன் ஹோம்ளியாக..

அந்த செல்பிக்கு மற்ற அழகிகள் என்றும் கேப்ஷன் கொடுத்திருந்தார். இந்நிலையில் அனிதா சம்பத், தனது கணவருடன் இருக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் சுடிதாரில் ட்ரெடிஷ்னல் நகைகளை போட்டு படு ஹோம்ளியாக உள்ளார் அனிதா சம்பத்.

என்ன விசேஷம்?

என்ன விசேஷம்?

மேலும் அந்த போட்டோவுக்கு ஃபேமிலி ஃபங்கஷன் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன விசேஷம் என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் ஜோடி பொருத்தம் சூப்பர் என்றும் அனிதாவையும் அவரது கணவரையும் புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X