திருந்தவே மாட்டியாம்மா.. கேபியை வைத்து சுரேஷை சப்பை காரணம் சொல்லி வெளியேற்றி பழி தீர்த்த அனிதா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அனிதா செய்த கேவலமான வேலையை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில், ஹவுஸ் மேட்ஸ்களுக்கு பால் போடும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும் போட்டியாளர்கள், அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் ஜோடி ஜோடியாக பிரிந்தனர். அதன்படி சுரேஷ் சக்கரவர்த்தியும் பாலாஜியும் ஒரு ஜோடியாக பிரிந்தனர்.

கேபி அனிதா சம்பத்

கேபி அனிதா சம்பத்

கேப்ரில்லாவும் அனிதா சம்பத்தும் ஒரு ஜோடியாக பிரிந்தனர். இந்த டாஸ்க்கில் இருவரில் யார் பால் போட்டாலும் அவரது பார்ட்னர் காப்பாற்றப்படுவார் என்று அறிவித்திருந்தார் பிக்பாஸ். மேலும் பவுலுக்குள் பாலை போடும் போட்டியாளர்கள், ஒரு நபரை வெளியேற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாலாஜி வெளியேற்றம்

பாலாஜி வெளியேற்றம்

இந்நிலையில் முதலில் பவுலுக்குள் பாலை போட்ட ஷிவானி, பாலாஜி முருகதாஸை, உயரமாக இருக்கிறார், ஆகையால் எளிதில் பந்தை போட்டுவிடுவார் எனக் கூறி அவரை வெளியேற்றினார். இதனால் அவரது ஜோடியான சுரேஷ் சக்கரவர்த்தி தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

காதில் சொன்ன அனிதா

காதில் சொன்ன அனிதா

அப்போது கேப்ரியல்லா பந்தை பவுலுக்குள் போட்டார். அவர் பந்தை போட்டவுடன் அவரது ஜோடியான அனிதா சம்பத் ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்தார். கட்டிப்பிடித்தப்படியே காதில் தாத்தாவை வெளியேற்றுமாறு கூறினார். இதனைக் கேட்ட கேபி, தாத்தா வெளியே போகனும் என்று கூறி, அவருடைய பார்ட்னர் ஸ்ட்ராங் என்றார்.

சுரேஷ் வெளியேற்றம்

சுரேஷ் வெளியேற்றம்

அவருடைய பார்ட்னரான பாலாஜி முருகதாஸ் ஏற்கனவே வெளியேறிய நிலையில் அனிதாவின் பேச்சைக் கேட்டு பார்ட்னர் ஸ்ட்ராங் என்ற ஒரு சப்பை காரணத்தை கூறி சுரேஷை கேப்ரியல்லாவும் அனிதாவும் சேர்ந்து வெளியே அனுப்பி விட்டனர்.

பகையாளியும் பகையாளியும்

பகையாளியும் பகையாளியும்

ஏற்கனவே எவிக்ஷன் ஃபிரி டாஸ்க்கின் போது சுரேஷ்தான் தன்னை வெளியேற்றிவிட்டார் என்று கூறி கடுப்பில் உள்ளார் கேப்ரியல்லா. இந்நிலையில் சுரேஷை கண்டாலே ஆகாத அனிதா என இருவரும் ஒன்றாய் சேர்ந்து பகையாளிக்கு பகையாளி கூட்டாளி என்ற லாஜிக்கின் அடிப்படையில் சுரேஷை பழி தீர்த்துக்கொண்டனர்.

விஷத்தை கக்கும் அனிதா

விஷத்தை கக்கும் அனிதா

என்னதான் அனிதா சம்பத், கமலுக்கு முன்பு நல்லவர் போல் நடித்தாலும் உடம்பு முழுக்க விஷத்தை வைத்துக்கொண்டு தொடர்ந்து சுரேஷ் மீது கக்கி வருகிறார். சுரேஷ் பலரை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு யாரையாவது குத்துவதாக குற்றம்சாட்டிய அனிதாதான் அந்த வேலையை தீவிரமாக செய்து வருகிறார்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 Wild Card Entry • October 2020
உண்மை முகம் கேவலம்

உண்மை முகம் கேவலம்

அனிதா சம்பத்தின் இந்த கேவலமான செயலால் செம கடுப்பாகி விட்டனர் நெட்டிசன்கள். நீயெல்லாம் திருந்தவே மாட்டியா என்றும் கேவலமாக திட்டி தீர்த்து வருகின்றனர். ஏற்கனவே பலமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெயரை டேமேஜ் செய்துகொண்ட அனிதாவின் உண்மை முகம் ரொம்ப கேவலமாக உள்ளது என்றும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X