சம்யுக்தாவுடனும் வாக்குவாதம்.. அன்சீனிலும் மொட்டை அங்கிளை பற்றி பேசிய அனிதா சம்பத்!
சென்னை: பிக்பாஸ் அன்சீனில் அனிதா சம்யுக்தாவுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அந்த வாக்குவாதம் சிரித்தப்படியே சென்றது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் இதுவரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருப்பவர் அனிதா சம்பத்தான்.
சக போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தியை சீண்டி தனது பெயரை டேமேஜ் செய்துக் கொண்டார். அவரது வயதுக்கு கூட மரியாதைக் கொடுக்காமல் மட்டமாக நடந்து கொண்டார்.

தூண்டிவிடும் அனிதா
போதா குறைக்கு சுரேஷுக்கு எதிராக பலரையும் தூண்டிவிட்டார் அனிதா. கேப்ரில்லாவையும் தூண்டி விட்டு பால் போடும் டாஸ்க்கில் இருந்து எடுத்த எடுப்பிலேயே சுரேஷ் சக்கரவர்த்தியை வெளியேற்றினார்.

எல்லாத்தையும் மறந்துவிட்டேன்
அனிதாவின் நடவடிக்கையை பார்த்த நெட்டிசன்கள், அவரை தாறு மாறாக கழுவி ஊற்றினர். போதா குறைக்கு அவரது அப்பாவும் அவரது கணவரும் செய்யும் சில செயல்கள் மக்களை வெறுப்படைய செய்துள்ளது. கமலுக்கு முன்னால் எல்லாத்தையும் மறந்துவிட்டேன் என கூறிய அனிதா சம்பத் விஷத்தை உமிழ்ந்து வருகிறார்.

அன்சீனில் வாக்குவாதம்
பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் ஃபார்ம் பண்றதே அவர்தான் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் அன் சீனில் அனிதா சம்பத் சம்யுக்தாவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

என்னை டார்கெட் பண்றாங்க
ஆனால் அந்த வாக்குவாதம் சிரித்தப்படியே சென்றதால் பெரிதாக தெரியவில்லை. அப்போதும் கூட சுரேஷ் சக்கரவர்த்தியை பற்றியே பேசியுள்ளார் அனிதா சம்பத். அதாவது, சம்யுக்தா அனிதாவிடம் எனக்கு கோபம் வந்துடுச்சு ஏன் எல்லாரும் என்ன டார்கெட் பண்றாங்க.

அவரு மேல கோவம் இருக்கு
நான் உங்கக்கிட்ட பேசல பழகுலன்னு சொல்றீங்க.. நீங்க வந்ததே எனக்கு தெரியல என்கிறார். அதற்கு அனிதா நீங்க கவனிச்சாதானே தெரியும் என்று கூறுகிறார். மேலும் எனக்கும் சுரேஷ் மேல கோவம் இருக்கு.. எனக்கு அவர பிடிக்காதுன்னு நான் சொல்ல விரும்பல.
Recommended Video

ஏன் இந்த மாற்றம்
ஆனா அவரு எல்லார்க்கிட்டேயும் சொல்லிக்கிட்டு இருக்காருல்ல.. இப்போ வந்து அவர் என்கிட்ட நல்ல பேசினாலும் கூட நான் பேசுவேன் என கூறியுள்ளார். அனிதாவின் இந்த மாற்றத்தை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு என்ன காரணமாய் இருக்கும் நல்லப் பெயர் வாங்க முயற்சி செய்கிறாரோ என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications