அர்ச்சனா மட்டுமல்ல.. இவரும் அதைத்தான் செய்றார்.. அனிதாவின் அடுத்த பாயாசம் பாலாவுக்குத்தான் போல?

சென்னை: பிடித்தவர்களை காப்பாற்றி விளையாடும் நம்பர் கேமை அர்ச்சனா மட்டுமல்ல பாலாவும் செய்கிறார் என்றே தெரிகிறது என அனிதா சம்பத் கமலிடம் அதிரடியாக போட்டுக் கொடுத்தார்.

Recommended Video

Yashika opens on her relationship with Bigg Boss Balaji Murugadoss

இந்த சீசன் முழுவதுமே குரூபிசத்தையும் ஃபேவரிடிசத்தையும் வைத்தே ஓட்டி விட்டனர்.

நம்பர் கேம் குறித்த சர்ச்சையில், அர்ச்சனாவின் பெயர் அடிபட்ட நிலையில், அனிதாவின் அதிரடி அட்டாக் பாலாவுக்கு எதிராக அமைந்தது எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

சோலோ பிளேயர்கள்

சோலோ பிளேயர்கள்

இப்போதைக்கு 10 பேர் கொண்ட பிக் பாஸ் வீட்டில் சோலோ பிளேயர்களாக இருப்பது மூன்று பேர் மட்டும் தான். ஆரி, ரம்யா மற்றும் அனிதா. அர்ச்சனா டீமில் இருந்து கொண்டிருந்த அனிதா, அங்கிருந்து நகர்ந்து பாலா பக்கம் சாய்ந்தார். ஆனால், பாலாவின் மாற்றி மாற்றி பேசும் குணத்தால், நாம சோலோ பிளேயராகவே இருந்திடலாம் என கேம் ஆடி வருகிறார்.

நம்பர் கேம்

நம்பர் கேம்

ஒருத்தர் இரண்டு பேரை நாமினேட் செய்தாலே அவர்கள் நாமினேஷனுக்கு வந்து விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அர்ச்சனாவின் அணியும் பாலாவின் அணியும் மாற்றி மாற்றி நாமினேட் செய்து அர்ச்சனா, சோம், கேபி, ரியோ, ஆரி, ஆஜீத், ஷிவானியை நாமினேஷனுக்கு கொண்டு வந்தனர்.

தாய் கோழி

தாய் கோழி

பிக் பாஸ் வீட்டில் அதிக ஓட்டுக்களை பெற்று தாய் கோழி பட்டத்தை பெற்ற அர்ச்சனா தனது தங்க முட்டைகளான ரியோ, சோம், கேபியை காப்பாற்ற ரொம்பவே போராடி வருகிறார் என்கிற நம்பர் கேம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதே குற்றச்சாட்டை பாலா பக்கமும் திருப்பி அர்ச்சனா கேங் வைத்தது.

ஓப்பன் ஸ்டேட்மென்ட்

ஓப்பன் ஸ்டேட்மென்ட்

பாலா ஷிவானியை நாமினேட் செய்ய மாட்டேன் என்றும், ஷிவானி பாலாவை நாமினேட் செய்ய மாட்டேன் என்றும் ஓப்பனாகவே என்னிடம் கூறியுள்ளனர் என ஆரி ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்ததும் பாலா பழைய பாலாவாக மாறிவிட்டார். ஆரி சொன்ன குற்றச்சாட்டையும் ஒப்புக் கொண்டார்.

அனிதாவின் ஆட்டம்

அனிதாவின் ஆட்டம்

ஆரி சொல்வது சரி தான் கமல் சார், எனக்கும் பாலா செய்வது சரியாக படவில்லை. நம்பர் கேம் அர்ச்சனா அக்கா மட்டும் ஆடுவதாக தெரியவில்லை. இங்கே பாலாவும் சூப்பரான நம்பர் கேம் ஆடுகிறார். நிப்பான் டாஸ்க்கில் தனது அணியை உடனடியாக தானே தேர்வு செய்துக் கொண்டார்.

நழுவிய ரம்யா

நழுவிய ரம்யா

பாலா, ஷிவானி, ஆஜீத், ரம்யா என ஒரு குரூப்பை பாலா காப்பாற்ற ரொம்ப மெனக்கெடுகிறார் என்றார் அனிதா. பாலாவிடம் ஒவ்வொரு முறையும் ரகசியமாக பிளான் போட்டு பேசிவிட்டு, நான் இன்னும் தனி தான் என ரம்யாவும் பாலா மீது அதே பழியை போட்டு ஒதுங்கி கொண்டார்.

அடுத்த பாயாசம்

அடுத்த பாயாசம்

போன வாரம் அனிதா சம்பத் போட்ட பாயாசத்தின் தாக்கம் இந்த வாரம் வரை நீடிக்கிறது. அன்பு கேங்கை கூண்டோடு ஒழித்துக் கட்ட இறங்கி ஆடி வரும் அனிதா, கடந்த வாரம் ஜித்தன் ரமேஷ், நிஷாவை வெளியே அனுப்பிய நிலையில், இந்த வாரம் அர்ச்சனாவுக்கும் எக்ஸிட் கொடுத்துள்ளார். இப்போ, அவரது அடுத்த அட்டாக் பாலா தான்.

பவர்ஃபுல் பிளேயர்கள்

பவர்ஃபுல் பிளேயர்கள்

எப்படியோ குட்டி சுட்டீஸை வைத்துக் கொண்டு கடைசியில் கேம் ஆடினால் கப் ஜெயித்து விடலாம் என்பதற்காக, இந்த சீசனில் பவர்ஃபுல் பிளேயர்களை முதலில் வீட்டுக்கு அனுப்பும் யுக்தி ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, சனம் ஷெட்டி மற்றும் அர்ச்சனாவின் எவிக்‌ஷனில் இருந்து இது தெளிவாகிறது. ஒருவேளை கடைசியா அனிதா டைட்டில் வின்னர் ஆகிடுவாரோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X