தீயாய் வேலை செய்யும் அனிதா.. அர்ச்சனா, ரியோ தான் முகமூடியை கழட்டல.. அடுத்த பாயாசம் யாருக்கு?
சென்னை: ரம்யா பாண்டியன் சாஃப்ட் ஹர்ட் என்று சொன்னால், அனிதா சம்பத் பாயாசம் போடும் பாட்டியாகவே மாறிவிட்டார்.
அர்ச்சனாவின் அன்பு சாம்ராஜ்யத்தை ஆரி அல்லது பாலா இருவரில் ஒருவர் முறியடிப்பார்கள் என்று பார்த்தால், தனி ஒருத்தியாக அஸ்திவாரத்தையே ஆட்டிப் படைத்து விட்டார் அனிதா சம்பத்.
என்னையா முட்டையை வச்சி உன் பிரஷ்ல பல்லு துலக்க சொன்ன என அர்ச்சனாவை கங்கணம் கட்டிக் கொண்டு வெளியே அனுப்ப தீயாய் வேலை செய்து வருகிறார்.

எவிக்ஷன் பயம்
அனிதாவுக்கு எவிக்ஷன் பயம் கடந்த சில வாரங்களே வந்து விட்டது. அதனால், தனது குரலை உயர்த்தி, மற்றவர்களை வாரம் வாரம் வெளியேற்றும் பணியை சிறப்பாக செய்து வருகிறார் அனிதா சம்பத். சம்யுக்தா, சனம் ஷெட்டியை தொடர்ந்து நிஷாவின் வெளியேற்றத்துக்கும் அனிதா தான் காரணம்.

முகமூடி மேட்டர்
70 நாட்கள் ஆகியும் இன்னமும் முகமூடியை கழட்டாமல் விளையாடுவது யார் என கமல் கேட்க, அர்ச்சனா, ரியோ, ஷிவானி, கேபி, பாலா என பலரும் எல்லோரும் அவங்களாத்தான் விளையாடுறாங்க என சேஃப் பதிலை சொல்லி தப்பித்துக் கொண்டனர். பாலா போட்டிருப்பது என்ன என கமல் கேட்டு தனது சந்தேகத்தை தீர்த்துக் கொண்டார்.

பாலாவின் மனமாற்றம்
குறும்படம் போட்டு, மென்டல் பிளாக் இருக்குன்னு சொன்னதும், எங்கே ஓவியா போல நம்மையும் திடீரென வெளியே அனுப்பிடுவாங்களோ என்கிற பயத்தின் காரணமாக, திடீரென அநியாயத்துக்கு நல்லவனாக மாறிவிட்டார் பாலா. பாலா நீங்க புதுசா ஏதாவது முகமூடி மாட்டியிருக்கீங்களா என கமல் நோண்டி கேட்டு விட்டு, பதில் தெரியாமல் முழித்த பாலாவுக்கு மனமாற்றமா? என எடுத்துக் கொடுத்து மனமாற்றம் தான் சார் என்ற பதிலை சொல்ல வைத்தார்.

அர்ச்சனா அக்கா கழட்டல
அனிதா சம்பத் செம நக்கலாக அர்ச்சனாவை பார்த்து சிரித்ததை பார்த்த கமல், அனிதா நீங்க மைண்ட் வாய்ஸ்ல ஏதோ பேசுனீங்களா என்று வாயை பிடுங்க, அர்ச்சனா அக்கா இன்னும் முகமூடியை கழட்டல என நினைக்கிறேன் சார். வந்த புதுசுல அவங்க பலரது முகமூடியை கழட்டுவாங்கன்னு பார்த்தால், அப்படியே ஒரு குரூப்பை சேர்த்துக் கொண்டு சேஃப் கேம் ஆட ஆரம்பிச்சுட்டாங்க என வெளுத்து வாங்கி விட்டார்.

ரியோவும் மாஸ்க் போட்டுருக்கார்
அனிதா சம்பத்தின் அடுத்த பாயாசம் அர்ச்சனாவுக்கா? அல்லது ரியோவுக்கான்னு அடுத்த வாரம் தெரிந்து விடும். நிச்சயம் திங்கட் கிழமை நிறைய பேர் அர்ச்சனாவின் பெயரை நாமினேட் செய்வார்கள். அடுத்த வார நாமினேஷனுக்கு அர்ச்சனா வருவார் என்றே தெரிகிறது. அவரது அடுத்த இலக்கு ரியோ தான். இருவரும் வெளியேறி விட்டால், ஈஸியா நாம பைனலுக்கு போயிடலாம்னு அனிதா ரொம்பவே கனவோடு இருக்காங்க.. அவங்களுக்கும் இன்னும் விஜய் டிவி கேம் பத்தி தெரியல!


Click it and Unblock the Notifications











