கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் கப்பை வென்ற ஆரி அர்ஜூனனுக்கு அனிதா சம்பத் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் தனித்துவமாக விளையாடிய ஒருவர் அனிதா சம்பத்.

டாஸ்க் என்றாலும் சரி ஹவுஸ்ஹோல்டு வேலை என்றாலும் சரி, தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்பதை போல் பட்டைய கிளப்பினார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

தவறு என்பதை முகத்திற்கு நேராக கூறி வந்தார். கடைசியில் ஆரி விஷயத்தில் அவசரப்பட்டு கோபத்தை காட்டியதால் மக்களின் கோபத்திற்கு ஆளானார். இதனால் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அப்பா மரணம்

அப்பா மரணம்

அனிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததுமே அவருடைய அப்பா மரணமடைந்தார். ஷீரடி சென்றுவிட்டு ரயிலில் திரும்பிய போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

அப்பாவிடம் பேசவே இல்லை

அப்பாவிடம் பேசவே இல்லை

கடைசியாக அனிதா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பு அவரை பார்த்து பேசியதுதான். மீண்டும் வந்து பார்க்க அவர் உயிருடன் இல்லை. அனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகும் கூட அவர் தனது அப்பாவிடம் பேசவில்லை.

ஆரியை அப்பாவுக்கு பிடிக்கும்

ஆரியை அப்பாவுக்கு பிடிக்கும்

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் ஃபினாலே வாரத்தில் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா, தனது அப்பாவை நினைத்து கதறினார். ஆரியை தனது அப்பாவுக்கு பிடிக்கும் என்றும் தான் சண்டை போட்டது குறித்து வீட்டில் கேட்டதாகவும் கூறினார்.

அண்ணன் தங்கை பாசம்

அண்ணன் தங்கை பாசம்

பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து இறுதியாக வெளியே செல்லும் போதும் ஆரியிடம் பேசிய அனிதா சம்பத், கப்போட வாங்க ஆரி என்று வாஞ்சையோடு கூறி சென்றார். அனிதாவுக்கும் ஆரிக்கும் ஆயிரம் சண்டைகள் இருந்தாலும் அழகான அண்ணன் தங்கை பாசமும் இருந்தது.

கைகளை தட்டி

கைகளை தட்டி

ஆரி பிக்பாஸ் வின்னராக அறிவிக்கப்பட்ட போதும் ரொம்பவே மகிழ்ச்சியுடன் எழுந்து நின்று கைகளை தட்டினார் அனிதா சம்பத். இந்நிலையில் ஆரி வெற்றி பெற்றது குறித்து அனிதா சம்பத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அனிதா டிவிட்

அனிதா டிவிட்

அதாவது, வாழ்த்துகள் ஆரி பிரதர்.. தகுதியான டைட்டில் வின்னர்.. என ஆரி ட்ரோஃபியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஃபைனலிஸ்ட்டாக செல்ல தகுதியானவர். ஆனால் அந்த வாய்ப்பை இழந்து விட்டீர்கள் என கூறி வருகின்றனர்.

ஃபைனல் வந்திருக்கணும்

ஃபைனல் வந்திருக்கணும்

அனிதாவின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி வெற்றி நேர்மையின் வெற்றி. நீங்க தான் ஃபைனல் வந்துருக்கனும். அந்த தகுதி உங்களுக்கு தான் இருந்தது. வாழ்த்துக்கள். உங்கள் அப்பா மறைவு வருத்தமளிக்கிறது. அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.. என பதிவிட்டுள்ளார்.

ரம்யா இடத்தில்..

ரம்யா இடத்தில்..

அனிதாவின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரியிடம் கோபப்படாமல் புரிந்து கொண்டிருந்தால் நீங்கள் ரம்யா இடத்தில் இருந்திருப்பீர்கள்.. என்று ஆறுதல் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X