For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆளுக்கும் வாய்க்கும் சம்பந்தமே இல்லயே.. அழகு ஆபத்துன்னு உணர்த்திட்டீங்க அனிதா.. அப்செட்டான ஃபேன்ஸ்!

  |

  சென்னை: முதல் நாளே அனிதா சம்பத்தை புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள் தற்போது அவரின் நடவடிக்கையை பார்த்து அப்செட் ஆகியுள்ளனர்.

  The first big fight of Big Bigg Boss Tamil | promo 1

  அனிதா சம்பத், தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் ஆவார்.

  வணக்கம் தமிழா உட்பட சில நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சி சேனலில் தொகுத்து வழங்கியுள்ளார் அனிதா சம்பத்.

  அது ஒரு கேம் ஷோங்க.. ரியாலிட்டி எல்லாம் கிடையாது.. பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நமிதா பேட்டி!

  போட்டியாளர் அறிமுகம்

  போட்டியாளர் அறிமுகம்

  அதோடு மட்டுமின்றி காலா, காப்பான், ஆதித்ய வர்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் அனிதா சம்பத். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அறிமுகத்தின் போதே ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளைக் கொண்டார் அனிதா.

  பொம்மை போல்

  பொம்மை போல்

  எப்போதும் பாஸ்போர்ட் சைஸில் ஒரே ஃபிரேமில் பார்த்து பழகிய அனிதாவை, முதல் முறையான முழு லுக்கில் பார்த்த ரசிகர்கள் பொம்மைப் போல் க்யூட்டாக இருக்கிறாரே என வாயை பிளந்தனர் நெட்டிசன்கள். செம அழகு, சினிமாவில் ஹீரோயினாவே நடிக்கலாம் என புகழ்ந்தனர்.

  கழுவி ஊற்ற தொடங்கினர்

  கழுவி ஊற்ற தொடங்கினர்

  ஆனால் நேற்றைய எபிசோடிலேயே சொல்லாத ஒன்றை சொன்னதாகவும் பைசாவுக்கு புரயோஜனமில்லாத ஒரு விஷயத்தை மற்றவர்களுடன் பேசியதோடும் அதை பெரிதாக்கியதாலும் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளானார். சமூக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்ற தொடங்கி விட்டார்கள்.

  ரொம்ப அவசரம்

  ரொம்ப அவசரம்

  இந்நிலையில் இன்று வெளியான இரண்டு புரமோக்களிலும் தன்னைத்தானே டேமேஜ் செய்துக் கொண்டார் அனிதா சம்பத். சுரேஷ் சக்கரவர்த்தியின் வயதுக்கு கூட மரியாதைக் கொடுக்காமல், தெனாவட்டாக பதில் சொல்வது, நக்கலாக சிரிப்பது, குரூப் ஃபார்ம் செய்வது என அவசரம் அவசரமாக அடுத்தக் கட்டத்திற்கு செல்கிறார்.

  ட்ரிகர் செய்கிறார்

  ட்ரிகர் செய்கிறார்

  நேற்று அறந்தாங்கி நிஷாவின் கலரை தனது அம்மாவுடன் ஒப்பிட்டு சென்டிமெண்டாக பேசி அழுதார். அதைப்பார்த்ததுமே நெட்டிசன்கள் என்னம்மா அனுதாப ஓட்டை வாங்கும் முயற்சியா என கிண்டலடித்தனர். இந்நிலையில் எல்லா வேலையையும் இவரே செய்துவிட்டு கடைசியில் சுரேஷ் சக்கரவர்த்தி தன்னை ட்ரிகர் செய்வதாக குண்டை தூக்கி போட்டார்.

  தன்னை நியாயப்படுத்தி

  தன்னை நியாயப்படுத்தி

  மேலும் எனக்கு இந்த கெட்ட பெயர் தேவையா என்றும், எனக்கு கெட்டப் பேரை வாங்கித்தரப் பார்க்கிறார் என்றும் கேமரா முன்பு படபடவென குரல் தழுதழுக்க தன்னை நியாயப்படுத்தப் பார்க்கிறார். இதனை கண்டுபிடித்த நெட்டிசன்கள் என்னம்மா இப்படி பண்ணீட்டிங்களேம்மா.. என வேதனை தெரிவித்துள்ளனர்.

  அழகு மட்டுமில்ல ஆபத்து

  அழகு மட்டுமில்ல ஆபத்து

  அனிதா சம்பத்துக்கு வாய் ஜாஸ்திதான் என்றும் பழைய பிக்பாஸ் சீசன்களை பார்த்து விட்டு படு ஜோராக நடிக்கிறார் என்றும் விமர்சித்துள்ளனர். ஆளுக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை என்றும் அழகாய் இருக்கிறார் என்று பார்த்தால் ஆபத்தாவும் இருக்கிறார் அனிதா என்றும் கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

  English summary
  Anitha Sampath upsets her fans by her behaving. Netizens says We believed you too early.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X