பிக் பாஸ் வீட்டில் விஜயதசமி கொண்டாட்டம்.. ஆங்கர் யார் தெரியுமா? சும்மா பேசியே சாவடிக்கிறங்க!
சென்னை: விஜய் டிவியின் விஜயதசமி ஸ்பெஷல் புரோகிராமே 4 மணி நேர தொடர்ச்சியான பிக் பாஸ் ஷோ தான்.
முடியலன்னாலும் நீங்க ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. ஏன்னா நடுவுல இம்ப்ரஸ் பண்ற விஷயங்களை அங்கொண்ணும் இங்கொண்ணும் வச்சி சர்ப்ரைஸ் பண்ணிடுவாங்க.
இன்றைய விஜயதசமி கொண்டாட்டத்தை விவரிக்கவும், நடுவராக இருக்கவும் ரொம்ப பேசும் அந்த நபரை பிக் பாஸ் ஆங்கராக நியமித்துள்ளார்.

யார் அந்த ஆங்கர்
ஆங்கர் என்ற உடன் அர்ச்சனா அக்கா என நினைத்து விடாதீங்க, இவங்க அவங்களுக்கும் மேல, நம்ம சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் தான் விஜயதசமி நிகழ்ச்சியின் ஸ்பெஷல் ஆங்கர். அழகா ஆரம்பிச்சு விஜயதசமி 4 மணி நேரம் ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுத்து நடத்துனாங்க.

நவராத்திரி கொலு
விஜயதசமி மற்றும் நவராத்திரி கொலு என இரண்டுமே இன்றைக்கே கொண்டாடிட்டாங்க. 9 நாட்களுக்கு முன்பே கொலு வைத்து, இன்னைக்கு நிறைவு செய்வது தான் கொலு. ஆனால், இது பிக் பாஸ் வீடு என்பதால், எல்லாமே ஒரே நாளில் வைத்து கொண்டாடப்படுகிறது. போட்டியாளர்கள் பொம்மைக்கு கலர் அடித்த விஷயங்களையும் அனிதா அழகா பேசினார்.

சும்மா பேசியே சாவடிக்கிறங்க
ஆனால், கொஞ்சம் நேரத்துக்கு அப்புறம் தொடர்ந்து லொட லொடன்னு எல்லாம் விஷயத்தை பத்தியும் பேசிட்டு வந்த அனிதா சம்பத்தை பார்த்து, பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களே கடுப்பாகி இருப்பார்கள். அதை பார்த்துக் கொண்ட மக்கள் இன்னமும் டென்ஷன் ஆகிடாங்க..

நடுவர் வேற
ஆங்கராக வந்து டார்ச்சர் பண்ணது மட்டுமில்ல, சமையல் போட்டியின் போது நடுவராகவும் மாறி அனிதா சம்பத் பண்ண அட்டகாசம் எல்லாம் பார்க்கவே முடியல. சன் டிவி செய்தியாளரான அனிதா சம்பத் தனக்கு கொடுத்த பொறுப்பை கடைசி வரை சீரும் சிறப்பாகவே செய்தார். நல்ல வேளை அர்ச்சனா அக்காவுக்கு அந்த பொறுப்பை கொடுக்கல..


Click it and Unblock the Notifications











