வாடா போடான்னு பேசியதை விட நான் ஒன்னும் அசிங்கப்படுத்தல.. ஆரியிடம் சுரேஷ் குறித்து எகிறிய அனிதா!
சென்னை: வாடா போடான்னு பேசியதை விட நான் ஒன்னும் அதிகமா அசிங்கப்படுத்தவில்லை என கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அனிதா சம்பத்.
செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் நேற்று நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, சுரேஷ் சக்கவர்த்தி சுமங்கலி என்று சொன்ன ஒரு வார்த்தையையும் அவர் பேசியதையும் வைத்து பேசினார்.
சுமங்கலியாய் இருப்பதால்தான் தன்னை முதல் ஆளாய் செய்ய சொன்னார், இல்லாவிட்டால் செய்ய சொல்லியிருக்க மாட்டாரா என்றும் சுமங்கலிகளை ஒதுக்கக்கூடாது என்றும் கூறினார்.

கார்னர் செய்யும் அனிதா
இந்த விஷயம் சுரேஷ் சக்கரவர்த்தியை ரொம்பவே பாதித்துவிட்டது. தன்னை கெட்டவராக காட்ட முயற்சிக்கிறார் என வேதனைப்பட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி. மீண்டும் மீண்டும் அனிதா தன்னை கார்னர் செய்வதாக கூறி புலம்பினார்.

ஏன் சோகம்?
அனிதா சாரி கேட்ட போதும் கூட, நீ முன்னால் சாரி கேட்டு விட்டு பின்னால் என்னை குத்துவாய் உன் சாரியை வேண்டாம் என்று ஓட்டம் பிடித்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் சோகமாக படுத்திருந்த அனிதாவிடம் ஆரி ஏன் சோகம் என கேட்டார்.

பெரிதாக எடுத்துக்கொண்டு
அப்போது நேற்று நடந்த சம்பவங்களை கூறிய அனிதா, நான் சனம் ஷெட்டியை போல போடா வாடா என்றெல்லாம் பேசி அந்தளவுக்கு அசிங்கப்படுத்தவில்லை. நான் என்பதால்தான் இந்த சின்ன விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொண்டு இப்படி நடந்து கொள்கிறார்.
Recommended Video

என்னிடம் மட்டும் ஏன்?
சனம், வாடா போடா என பேசிவிட்டு சாரி கேட்டார். உடனே ஏற்றுக்கொண்டு அடுத்த 5 நிமிடத்தில் பேசிவிட்டார். என்னிடம் மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார். ஏற்கனவே என்னால் காயப்பட்டுள்ளார். அதனால் இம்முறை கொஞ்சம் ஹெவியாகதான் இருக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











