போறோம்னு தெரிஞ்சதும் கமல்க்கிட்டேயே இந்த அனிதா போடுற சீன பாருங்க.. வெளியான இரண்டாவது புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷனில் ஆரி, அனிதா, ஷிவானி, ஆஜித், கேபி ஆகியோர் இடம் பிடித்தனர்.
அவர்களில் ஆஜித், ஷிவானி, கேபி ஆகிய மூன்று பேரில் ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி
ஆனால் வாரத்தின் முதல் நாளிலேயே ஆரி தனது குடும்பத்தை பற்றி தவறாக பேசியதாக காட்ட முயன்ற அனிதா பயங்கரமாக கோபப்பட்டார். ஆரி சொல்வதையே கேட்காமல் கையை நீட்டியும் உதட்டைக் கடித்தும் அவர் பேசிய பேச்சு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஒட்டு போடபோவதில்லை
ஆரி என்ன சொல்ல வருகிறார் என்பதையே கேட்காமல் அனிதா நடந்து கொண்ட விதத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வாரம் அவரை வெளியேற்ற வேண்டும் என கூறி வந்தனர். அதேபோல் அனிதாவுக்கு வாக்களிக்க போவது இல்லை என்றும் என்று கூறி வந்தனர்.

விசாரித்த கமல்
இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று கமல் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்தார். அப்போது ஆரியிடம் எகிறியது மற்றும் பருப்பை கொட்டியது, பாலாஜியின் கேப்டன்சி குறித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கியது உள்ளிட்டவற்றை விசாரித்தார்.

நான் தான் போகப் போகிறேன்
மேலும் முதல் நபராக ஆரியையும் காப்பாற்றினார் கமல். இதனை பார்த்த அனிதா, நான் தான் இந்த வாரம் எவிக்ட்டாக போகிறேன், நிச்சயமாய் நான்தான் போகப் போகிறேன் என்று கூறிக்கொண்டிருந்தார். அதன் தாக்கம் நேற்று கமல் முடித்துவிட்டு சென்ற பிறகு சாப்பிடும் அவர் நடந்துகொண்ட விதத்திலேயே தெரிந்தது.

இழுத்த அனிதா..
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் எவிக்ஷன் கார்டுடன் வருகிறார் கமல். வணக்கம் சார் என்று இழுக்கிறார் அனிதா. தொடர்ந்து கமலும் வணக்கம் சொல்கிறார்.

வீட்டுக்கு போகணும்
தொடர்ந்து அனிதாவிடம் என்ன சொல்ல வர்றீங்க என்று கேட்கிறார் கமல். அதற்கு, சார் எனக்கு நியூ இயர் வீட்டுல செலிபிரேட் பண்ணனும்னு தோனுச்சு சார் என்று கூறுகிறார் அனிதா. அதற்கு பதில் சொல்லும் கமல், அதனால என்ன கேட்டு வாங்குற விஷயமா இதெல்லாம் என்று கூறிவிட்டு ஆஜித் பக்கம் திரும்புகிறார்.

ஆஜித் ஞாபகம் இருக்கா?
ஆஜித்திடம் பேசும் கமல், ஆஜித் நான் உங்கக்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தேன் ஞாபகம் இருக்கா? இன்னும் உங்க குரல் கேட்கணும்னு என்று கூறுகிறார். அதற்கு பதில் சொல்லும் ஆஜித் என்னால முடிஞ்ச வரைக்கும் எக்ஸ்போஸ் பண்ணியிருக்கேன் என்று கூறுகிறார்.

சீன் போட்ட அனிதா
எட்ஜ்தான் என்று நக நுனியை காட்டுகிறார் கமல். தொடர்ந்து எவிக்ஷன் கார்டை எடுத்து பார்க்கும் கமல் ஷாக்காகிறார். இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ. இதனை பார்த்த ரசிகர்கள், போகப் போகிறோம் என்று தெரிந்தும் கமலிடமே சீன் போடுகிறார் அனிதா என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











