சாப்ட தெரியும்ல.. அசிங்கமாய் கேட்ட அனிதா.. ஆவேசமான ரியோ.. ஆரியிடம் போன பஞ்சாயத்து!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா பேசிய பேச்சால் கடுப்பான ரியோ, அவர் கிட்சன் டீமுக்குள்ளேயே வேண்டாம் என ஆரியிடம் பஞ்சயாத்துக்கு சென்றார்.
Recommended Video
பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடில் அனிதா சம்பத் ஃபுல் பார்மில் இருந்தார். கிட்சன் டீமில் இருந்த அவர் சமைக்க ரொம்பவே சோம்பல் காட்டினார்.
பருப்பு இல்லாமல் எப்படி சாம்பார் வைப்பது? பாசிப் பருப்பில் எப்படி சாம்பார் வைப்பது? பொங்கலுக்கு வத்தல் குழம்பு வைக்கலாமா என்ம் சட்னி வைக்கலாமா என்றும் பெரிய டிஸ்கஷன் நடந்தது.

சாப்ட தெரியும்ல
அப்போது ரியோவிடம் என்ன சமையல் செய்வது என்று கேட்டார் அனிதா. அதற்கு எனக்கு சமையல் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது, ஏதாவது ஹெல்ப் கேட்டால் செய்வேஙன் என்றார். அதற்கு உடனே அனிதா, சாப்ட தெரியும்ல என்று கேட்க கடுப்பாகி விட்டார் ரியோ.

எது நல்லாருக்கும்?
முகம் மாறிய போதும் வெளியில் காட்டிக் கொள்ளாத ரியோ, ஏன் இப்படி கேட்குற நான் நல்லா சாப்டுவேன் என்றார். எது சமைத்தாலும் நல்லா சாப்பிடுவேன் என்று கூறினார். அதற்கு பொங்கலுக்கு என்ன சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று சொல்லுங்கள் இருப்பதை வைத்து செய்கிறேன் என்றார்.

வத்தல் குழம்பா?
அதற்கு ரியோ எதில் என்ன செய்வார்கள் என்று தெரியாது என்றார். அதற்கு அனிதா பருப்பு இல்லை ஆகையால் சாம்பார் வைக்க முடியாது என்றார். அதற்கு ரியோ அப்படியானால் வத்தல் குழம்பு வையுங்கள் என்றார். இதனால் வத்தல் குழம்பா, வெங்காய சட்னியா என பெரும் பிரச்சனை நடந்தது.

அனிதா வேண்டாம்
இடையில் சனத்துடனும் அனிதாவுக்கு அக்கப்போர் ஏற்பட்டதால் கோபித்துக்கொண்டு போய் படுத்துக் கொண்டார். இதனை பார்த்த ரியோ, ஆரியிடம் அனிதா இப்படி செய்து விட்டு சமைத்தால் சாப்பாடு ஒட்டாது புரோ, ஆகையால் நாமே சமைத்துக் கொள்ளலாம்.

முகம் சுறுங்கி போய்விட்டது
நான் சமைக்க தெரியாது என்றதும் சாப்பிட தெரியும்ல என்று அசிங்கமாய் கேட்கிறார். அவர் சமைக்க வேண்டாம் நாமே சமைத்து கொள்வோம் என பஞ்சாயத்து கூறினார். அப்போது குறுக்கிட்ட ஜித்தன் ரமேஷ், அதுக்கு அப்போவே முஞ்சு சுறுங்கி போய்விட்டது என்றார்.

என்னை எப்படி சொல்லலாம்?
தொடர்ந்து கிட்சனுக்குள் வந்த அனிதாவிடம் நீங்கள் சமைக்க வேண்டாம் நாங்களே பார்த்து கொள்கிறோம் என்றார். அதற்கு என்னை எப்படி நீங்கள் சமைக்க வேண்டாம் என்று சொல்வீர்கள்? நான் அரிசி, பருப்பு ஊற வைத்து விட்டு ரெஸ்ட் எடுக்க போனேன் என்றார் அனிதா.

முகத்தை காட்டிய அனிதா
அப்போது என்னிடம் கோபித்துக் கொண்டுதான் போனீர்கள் அது பச்சையா தெரிந்தது என ரியோ கூற, ஆமாம் என்ற அனிதா சனத்துடன் பிரச்சனை நடந்தபோது ஏன் முடித்து விடவில்லை என எகிறினார். நான்தான் முடித்தேன் என்று ரியோ கூற, பெரிய பிரச்சனையான பிறகு பேசினீர்கள் என்று முகத்தை காட்டினார்.

ஓவர் ஆட்டியூட்
இதேபோல் ஆரியிடமும் குரலை உயர்த்தி எகிறினார் அனிதா. இதனால் ஆரியின் முகமும் மாறியது. இருந்த போதும் அவர் அதனை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. நேற்றைய எபிசோடில் அனிதாவின் ஆட்டிட்யூட் கொஞ்சம் ஓவராகதான் இருந்தது.


Click it and Unblock the Notifications











